ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

பேயைக்கூட விரட்டிவிடலாம். ஆனால், நடுராத்தியில் நடமாடுகிற நாய்களை விரட்டுவது அவ்வளவு ஈஸியான காரியமா? இருட்டைப் பார்த்தே பம்மிப் பதுங்குற நம்மளைப் பார்த்துதான், நாய் குறிவெச்சுக் குரைச்சு பி.பி-யை ஏத்திவிடும். நைட் ஷிஃப்ட் முடிச்சுட்டு வீட்டுக்குப் போறவங்களுக்கு ஒண்ணு, ரெண்டு நாய்களைச் சமாளிக்கிறது பரவாயில்லைதான். ஆனா, சமயத்துல மொத்த நாய் இனமும் சிட்டிங் போட்டு மீட்டிங்ல இருக்கும். அதிலும், ஆளே இல்லாத தெருவில் நம்மைப் பார்த்ததும் ஸ்லோமோஷன்ல எந்திரிக்கிற நாய்களைப் பார்த்தா, பக்குனு இருக்குமா இல்லையா? ‘சரி... அதை ஏங்க இப்போ ஞாபகப்படுத்திக்கிட்டு, ராத்திரிக்கு ஃப்ரெண்டுக்கு போனைப் போட்டுக்கிறேன்’னு எழுந்திரிச்சுப் போறதுக்கு முன்னாடி ஒரு குதூகலச் செய்தி. வாங்க, நாயை ஆண்ட்ராய்டை வெச்சே அலறவைப்போம்!

‘டாக் ரிபெலென்ட்’ அதாவது ‘நாய் விரட்டி’ என்ற இந்த அப்ளிகேஷன், நாய்களிடம் இருந்து நம்மைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. அர்த்த ராத்திரியில் வீடு திரும்பும்போது, நாய்கள் இருந்தால் கவலையே வேண்டாம். அப்ளிகேஷனைத் திறந்து, அதில் இருக்கும் பட்டனை ‘ஆன்’ செய்தால் போதும்! அப்ளிகேஷனில் இருந்து வெளியேறும் ‘அல்ட்ராசோனிக் ஹை ஃப்ரீக்வென்ஸி சவுண்ட்’ நாய்களைத் தொந்தரவு செய்யும், எரிச்சலூட்டும். எப்படி நாய்கள் பூகம்பத்தை உணர்ந்து நகர்ந்து போகிறதோ, அதே போல இந்த அப்ளிகேஷனில் இருந்து வெளியேறும் சத்தம் நாய்களை விரட்டும். இந்தச் சத்தம் மனிதர்களின் காதுகளை எட்டாது என்பதால், உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அப்ளிகேஷனைப் பயன்படுத்தியவர்களும், ‘தினமும் நாயைக் கண்டா ஓடிக்கிட்டு இருந்த எனக்கு, இந்த அப்ளிகேஷன்தான் தைரியமா நடக்க வெச்சிருக்கு!’ என்கிற ரீதியில் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். ‘டாக் ரிபெலென்ட்’ மட்டுமல்ல, ‘டாக் அவே’, ‘டாக் ரிபெல்’ எனப் பலப்பல பெயர்களிலும் இந்த நாய்விரட்டிகள் ஆண்ட்ராய்டில் கிடைக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்