கூலிங்கான போகா!

ஜெர்மனியினர் யோகாவையும், பீரையும் சரியான அளவில் மிக்ஸ் செய்து ‘போகா’ எனப் புதிதாக ஒரு ஃபிட்னெஸ் பயிற்சிமுறையைக் கண்டுபிடித்துள்ளார்கள். (ஆஹா...) இந்தப் பயிற்சியில் பங்குபெறுபவர்கள் பீர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டோ, தலையில் கரகம் போல் வைத்துக்கொண்டோ, அல்லது கேப்பில் ஒரு கல்ப் அடித்துக்கொண்டோ ஆசனங்கள் செய்யலாம். மேட்டர் சுவாரஸ்யமாக இருப்பதால், மக்களும் பயிற்சி வகுப்புகளுக்குப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதுபற்றி ‘போகா’ பயிற்சி முறையைக் கண்டுபிடித்த யோகா பயிற்றுவிப்பாளர் ஜுலா கூறுகையில், ‘‘யோகா செய்யவும், பீர் குடிக்கவும் நிறைய மக்களுக்குப் பிடிக்கும். அதுதான் இந்த இரண்டையும் இணைத்துப் புதிதாய் ‘போகா’வைக் கண்டுபிடித்தேன். இங்கு போகா செய்ய வருபவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து வருபவர்கள் அல்ல, நிறையப் பேர் யோகா செய்யாமல் வெறும் பீர் மட்டும் குடிச்சுட்டுக் கிளம்பிடுறாங்க. ஆனால், இதற்காக நான் கவலைப்படவில்லை. இந்தப் பயிற்சி, மக்களுக்கு யோகா சொல்லிக்கொடுப்பதையும் தாண்டி அவர்களின் கவலைகளை மறக்கடித்து ஜாலியாக உணரவைத்தாலே போதும்னு நினைக்கிறேன். கர்ப்பிணிப் பெண்களும் ‘போகா’ பயிற்சி செய்யலாம். ஆனால், அவர்களுக்கு ஆல்கஹால் இல்லாத பீர்’’ என்கிறார். ஆனால், பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள் ‘இது ஒரு மொக்கை ஐடியா. மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்’ எனக் கழுவி ஊற்றி வருகிறார்கள். எனக்கு இந்த ‘போகா’ செய்யறவங்களைப் பார்க்கும்போது ‘தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி’ சிவக்குமார்தான் ஞாபகத்துக்கு வருகிறார்!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick