மீண்டும் ஓர் அதிர்வலை!

‘ஃபான்டரி’ படத்தின் மூலம் 2013-ல் அதிர்வலையை ஏற்படுத்திய மராத்தி சினிமா இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே அடுத்த அதிர்வலையைத் தன் இரண்டாவது படத்தின் மூலம் ஏற்படுத்தி இருக்கிறார். பெர்லின் திரைப்பட விழாவில் சிறப்புப்பிரிவில் தேர்வான படமாக கவனஈர்ப்பு பெற்றிருக்கிறது அவரது ‘சாய்ரத்’ என்ற படம்! ஹீரோயினாக நடித்த ரிங்கு ராஜகுரு என்ற பெண்ணுக்கு இந்த ஆண்டு தேசிய விருதுப்பட்டியலில் சிறப்பு விருதும் கொடுத்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது.

நாகராஜ் மஞ்சுலே, மகாராஷ்டிரா மாநிலத்தின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இலக்கியவாதி. ‘ஓடாரி’ என்று சொல்லக்கூடிய பழங்குடி இனத்தவர்!  ‘கைகரி’ என்ற தமிழ் - கன்னடம் கலந்த திராவிட மொழியைப் பேசும் இனத்தவர். பாரம்பரியத் தொழில் பன்றி வளர்த்தல், கூடை முடைதல் போன்றவை என்பதால் முதல் படமான ‘ஃபான்டரி’யில் சாதிய ஏற்றத் தாழ்வுகளை நாசூக்காக சாடி இருந்தவர் க்ளைமாக்ஸில்  செம பஞ்ச் வைத்து முடித்திருந்தார். ஆதிக்க வெறிக்கு எதிராகத் திருப்பி அடிக்கும் அந்த விடலைப் பையன் பாத்திரத்தின் மூலம் தன் கோபத்தை ஆழமாகப் பதிவு செய்திருந்தார். இந்தியாவையும் தாண்டி அந்தக் க்ளைமாக்ஸ் காட்சிக்காகப் படம் அதிகமாக பேசப்பட்டது. ‘சாய்ரத்’ என்றால் மூர்க்கத்தனமான அன்பு அல்லது கோபம் என்று அர்த்தம். அது ஜாதி மீதா? காதல் மீதா? என்பதற்கான விடையைப் படம் சொல்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்