சினிமால்!

 ‘காஞ்சனா 2’ படத்துக்குப் பிறகு லாரன்ஸ் காட்டில் அடைமழைதான்.  ஓர் இளம் இயக்குநர் சொன்ன கதை லாரன்ஸுக்கும் பிடித்துப்போக, அவர் நயன்தாராதான் கதைக்குப் பொருத்தமான ஹீரோயின் எனச் சொல்லியிருக்கிறார். லாரன்ஸ் தரப்பிலிருந்து நயன்தாராவை அணுக, அவரோ மாஸ்டருடன் நடிக்க நான் எப்பவுமே ரெடி எனச் சொல்லிவிட்டாராம்.

‘ஐ’ படத்துக்குப் பிறகு உடம்பை வருத்திக்கொள்ளும் படங்களைக் குறைப்பதென்ற முடிவுக்கு வந்துவிட்டார் விக்ரம். இதனால் அனைத்து தரப்பையும் கவரும், குறைந்த நாட்களில் முடியும் கமர்ஷியல் படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அடுத்து ‘கருடா’ படத்தில் இந்தியா-பாகிஸ்தான் ஒற்றுமையை வலியுறுத்தும் கதைக்களத்தில் நடிக்கிறாராம். படத்தில் தீவிரவாதிகளைக் களையெடுக்கும் வேடத்திலும் பின்னி எடுக்கப் போகிறாராம். பாகிஸ்தானில் படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் ஓமன், நமீபியா நாடுகளில் முக்கியமான காட்சிகளை எடுக்க இருக்கிறார்களாம். கேப்டன் இடத்துக்கு ஆள் வந்தாச்சு!

இந்தி நடிகைகளில் மிகவும் துணிச்சலானவர் பிபாஷா பாசு. மிகவும் இளம் வயதிலேயே நடிக்க வந்த பிபாஷா எதைப் பற்றியும் கவலைப்படாதவர். இரண்டு முறை காதலில் தோல்வியடைந்திருக்கிறார். தன்னை விட மூன்று வயது குறைவான, இரண்டு முறை விவாகரத்து பெற்ற கரண்சிங் குரோவர் என்பவரை மூன்றாவது முறையாகக் காதலித்து வந்தார். இந்தக் காதலும் தோல்வியில் முடிந்துவிடக் கூடாது என்பதால் கவனமாக பெற்றோர் சம்மதத்துடன் குரோவரை கரம் பிடித்து விட்டார். ஷாக்!

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த ஜெய், வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 பார்ட் 2’-வில் நடிக்க ஆரம்பித்த பிறகு உற்சாகமாகி இருக்கிறார். அதையடுத்து ‘முண்டாசுப்பட்டி’ ராம் இயக்கும் ‘ராட்சஷன்’ படத்தில் நடிக்கிறாராம். ‘முண்டாசுப்பட்டி’ போலவே மூட நம்பிக்கைகளை நகைச்சுவையாகச் சாடும் படமாம். இதில் போலீஸாக நடிப்பதால் அதற்கேற்ப தன் பாடியை மெயின்டெயின் பண்ணி வருகிறாராம். போலீஸா நடிச்சா ஹிட்டுனு சொல்றது மூட நம்பிக்கை இல்லைதானே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்