வெளியில வெக்கை, இது ரொம்ப மொக்கை!

ல்ல கவிஞர்கள் பலர் இருக்கும் இதே ஊரில்தான் அவர்களுக்கே சவால்விடும் சில மொக்கைக் கவிஞர்களும் இருக்கிறார்கள். அவர்கள் உருகி உருகி எழுதிய கவிதைகள் கொஞ்சம் கீழே...

போண்டா சுடத் தேவை எண்ணெய்.
என் பொண்டாட்டி ஆக்குவேன் உன்னை.
# டீக்கடையில் எண்ணெய் சட்டிக்குப் பக்கத்தில் நின்னு யோச்சிருப்பான்னு நினைக்கிறேன்.

காதலித்தால் அரிச்சந்திரனும் பொய் சொல்வான்.
கல்யாணம் முடிந்தால் அர்னால்டும் அடி வாங்குவான்.
# இந்தக் கவிஞர் தினமும் ஜிம்முக்குப் போறவரா இருப்பார் போல.

சென்னையில இருக்கும் மெரினா
நான் வாங்கித்தரவா உனக்கு டொரினா.
# இதுக்கு ஏன்டா மெரினாவைத் தோண்டுறே.

நெருப்பில்லாம புகையாது பீடி
நான் வருவேன் தினமும் உன்னைத் தேடி.
# செய்யது பீடியை இழுத்துத் தம் கட்டும்போது சிந்திச்சிருப்பானோ.

வெயிலுக்கு உடம்பெல்லாம் எரியுதே
நீ வைத்த அன்பு இப்போதான் புரியுதே.
# எல்லோருக்கும்தான்யா எரியுது.

வெறிநாய் கடிச்சா போடணும் ஊசி
வெறித்தனமா நீ என்னை நேசி.
# வெறி பிடிச்ச காதலனா இருப்பான்னு நினைக்கிறேன்.

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick