டோனி பாவம்!

ஐ.சி.சியின் அத்தனை கோப்பைகளையும் வென்று தந்த கேப்டன், உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர், தி ஃபினிஷர், கேப்டன் கூல் என பல பெயர்களால் கொண்டாடப்படும் டோனியாய் இருக்கிறது எவ்ளொ கஷ்டம் தெரியுமா? என்னது, தெரியலையா? தெரிஞ்சுக்கோங்க!

டோனி மீது பெரும்பாலும் தூக்கிப் போடப்படும் குண்டு ‘சீனியர் வீரர்களை ஒதுக்கி வெச்சது’ என்பதுதான். (ஒதுக்கி வைக்க, பதுக்கி வைக்க அவங்க என்ன ஃபாரீன் சரக்கா? ) இதனாலேயே, சேவாக், காம்பீர் போன்ற சீனியர் ப்ளேயர்களின் சினங்கொண்ட ரசிகசிங்கங்கள் மீம்ஸ், ஸ்டேட்டஸ் மூலம் மேட்சுக்கு மேட்ச் டோனியைத் தாக்கி டரியலாக்குவார்கள். ஒவ்வொரு மேட்ச் ஆடும்போதும் இதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா?

‘வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் மேட்ச்களில் டோனி சிறப்பாக கேப்டன்ஷிப் செய்வது கிடையாது. எனவே. அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என ஒவ்வொரு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளின் போதும் திரி கொளுத்திப் போட்டு எப்படியோ நினைச்சதை சாதித்துவிட்டார்கள். அடுத்து ஒருநாள் போட்டிகளுக்கும் போட்டுக்கொடுக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க. இப்போ தெரியுது மனுஷன் குத்தவெச்சு உட்கார்ந்திருப்பது முள் நாற்காலியில் என்று.

முன்னர் நீளமாக, ஸ்ட்ரெய்ட்னிங் செய்த ஹேர்ஸ்டைலோடு இருந்த டோனி, பின்னர் கட்டிங்கைப் போட்டார். அப்போது ‘ மயிர் நீப்பினும் உயிர் வாழும் சிங்கம்’னு பூரிப்பு பூரி சுட்ட அதே பயபுள்ளைக தான் இப்போ அரமண்டை கட்டிங், மாவுத்தலை கட்டிங்னு கலாய்க்குறாய்ங்க. முடியில் கூடவா? முடியலை..

‘டோனி பெஸ்ட் ஃபினிஷரா?’ என கேட்டால் பூம்பூம் மாடு கூட ‘ஆமாம்’னு தலையை ஆட்டும். அப்படிப்பட்ட ‘ஃபினிஷிங்’ சிங்கத்தைக் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார் என்ற ஒரே காரணத்திற்காக உமேஷ் யாதவ் கூடவும், ஹர்பஜன் கூடவும் ஒப்பிட்டுப் பேசுவது ரொம்ப பாவம் மை சன். அந்த மனுஷன் மனசு எப்படி கிடந்து துடிக்கும்!

டீமில் ஒருவரை எடுக்கவில்லை என்றாலும் ‘பாலிடிக்ஸ்’, டீமில் ஒருவரை எடுத்தாலும் ‘பாலிடிக்ஸ்’, தண்ணீர் பாட்டில் தூக்காவிட்டால் ‘பாலிடிக்ஸ்’, ஓவர் கொடுக்கலைனா ‘பாலிடிக்ஸ்’, பேட்டிங் கொடுக்கலைனா ‘பாலிடிக்ஸ்’, தூரத்தில் ஃபீல்டிங் நிப்பாட்டினால் ‘ பாலிடிக்ஸ்’ என எதற்கெடுத்தாலும் பாலிடிக்ஸ் என கூறி டோனியை நடமாடும் பாலிடிக்ஸ் பால்டாயிலாகவே உருவகப்படுத்திவிட்டார்கள்.

இப்படி அடிமட்டும் வரை இறங்கி அடிக்கும் டோனி ஹேட்டர்ஸ்களை விட அவரது ரசிகர்கள் தான் உண்மையிலேயே ஸ்லீப்பர் செல்கள். அடிக்கடி ‘ டோனியிடம் பத்து மரக்கட்டைகளைக் கொடுத்துப் பாருங்கள், அவைகளை வைத்தே போட்டியில் ஜெயித்துக் காட்டுவார்’ என்பது போல் கரியை அள்ளிப் போடுவார்கள்.

என்னத்த சொல்றது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்