அரசியலில் இதெல்லாம்...

மிழகத்துல இருக்கிற லெட்டர்பேடு கட்சிகளைப் பார்த்தா பாவமா இருக்கும். ஒவ்வொரு தேர்தலுக்கும் பெரிய பெரிய கட்சிகளோட கூட்டணி வைக்கவும், ஆதரவு கொடுத்து அடுத்த எலக்‌ஷனுக்காக இப்பவே துண்டைப் போட்டு வெச்சுக்கிறதுமா, அவங்க படும் பாடும் பெரும்பாடு! ஆனா, இந்தமாதிரி லெட்டர்பேடு கட்சிகளை நடத்துறது, சாதாரண விஷயம் இல்லை பாஸ். சங்கடமே படாம சர்க்கஸ் காட்டணும்!

டைட்டிலைத் தெறிக்கவிட்டாதான், அரசியல் கட்சிக்கே அழகு! பெரும்பாலும் ‘திராவிடர்’ங்கிற பெயரை வெச்சுத்தான் கட்சிகள் காயை நகர்த்திக்கிட்டு இருக்காங்க. அப்படி இருக்கும்போது லெட்டர்பேடுக்கு ஆர்டர் கொடுக்குறவங்க மக்களோட சூடு, சொரணையைச் சுரண்டி எடுக்கிறமாதிரியான பெயரைத்தான் கட்சிக்கு வைக்கணும். ‘இனமான’, ‘மானமுள்ள’, ‘மண்டியிடாத’னு ஆரம்பிக்கிற கட்சிகளோட பெயரை வாசிக்கும்போதே, நரம்பு புடைக்கணும். கண்ணு செவக்கணும். உதடு துடிக்கணும்ங்கிறது அவங்க எதிர்பார்ப்பு!

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...’னு காலம் காலமா கழுவுற பழைய பாத்திரத்தையே கழுவிக்கிட்டு இருக்காம, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊழல் பணத்தை மீட்டு வீட்டுக்கு ஒரு கோடி கொடுப்போம்’, ‘பிறந்ததில் இருந்து இறக்கும்வரை மனிதர்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் செய்துகொடுப்போம்’, ‘வீட்டுக்கு வீட்டு பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை வழங்குவோம்!’னு செக்கச்செவேல் பொய்களை மூட்டை மூட்டையா இறக்குவாங்க. ஏன்னா, ஒருத்தனை ஏமாத்தணும்னா, முதல்ல அவனுக்கு ஆசை காட்டணும்னு சொல்லுது அரசியல் தியரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்