சினிமா விடுகதை!

ந்தியாவின்  மைக்கேல் ஜாக்ஸன் நம்ம ஊர் பிரபுதேவாவின் படங்கள்தான் இந்த வார சினிமா விடுகதையின் விடைகள் பாஸ்!

1. பட்டாசு கொளுத்திய படத்துல பாட்டெல்லாம் டபுள் மீனிங்! ‘எப்படி எப்படி’னு  அடல்ட்ஸ் ஒன்லி சங்கதியைக் கேட்ட பாட்டு ஹிட்டானதால ஓடுச்சே இந்த மூணெழுத்து சினிமா! அது என்ன சினிமா?

2. தகரம்கூட தங்கமாகும் ரசவாத சினிமா. இசைப்புயலின் இசையை உச்சம் கொண்டு சென்ற படம். நடனப்புயலும் வைகைப்புயலும் சேர்ந்து போட்ட ஆட்டத்துக்கு தியேட்டரில் விசில் பறந்த சினிமா! என்ன சினிமா?

3.
குடும்பக் கட்டுப்பாட்டை டைட்டிலில் சொன்ன படம். கவர்ச்சியில் போட்டி போட்டு ரெட்டைக்குதிரைகள் நடிச்ச படம். காமெடி இனிஷியல் இயக்குநரின் ஹிட் படம். டூ மச் படத்தில் டூ மச்சா நிறைய நடிகர்களும் நடிச்சிருந்தாங்களே? இப்ப சொல்லுங்க!

4. அடுக்குத் தொடர் டைட்டில் படத்தில் இன்னொரு மெகா ஸ்டாரும் நடிச்சிருந்தாரே! காமெடிக்குப் பெரும்பட்டாளமே நடிச்ச படத்துல பொய்யை மறைக்க பொய்மேல பொய் சொல்லி கிச்சுக்கிச்சு மூட்டி நம்மளை சிரிப்பா சிரிக்க வெச்சாங்களே, சொல்வீங்களா சொல்வீங்களா?

5. ‘குப்பத்து இளைஞனாய் மனதைத் தொட்ட சினிமா! கெஸ்ட் ரோலில் சமத்துவ நடிகர் நடிச்ச படத்தில் அஸ்ஸாம் பொண்ணுதான் ஜோடி! என்ன படம் நைனா?

6. அண்ணன் தம்பிங்க பாச சினிமா. பெரிய ஆளுகூட நடிச்ச படத்துல தம்பியா நைல் நதி டான்ஸ் போட்ட சினிமா. கூட்டுக்குடும்ப சினிமாவுல ஒல்லிக்குச்சி நடிகை நம்மாளுக்கு ஜோடி. என்ன படம் பாஸ்?

7. பெரிய ஆளுங்களை டைட்டில் வெச்சு  கூப்பிடுவாங்க. ஒல்லி பெல்லி ஹீரோயின் ஜோடினாலும் விண்ணுலக நடிகையும் இருந்தாரே! ஹார்பிக் நடிகரும் நடிச்ச படத்துல பாட்டு மட்டும் நல்லா இருக்கும்! என்ன படம் பாஸ்?

8. லவ்வர் பாய் சினிமா டைட்டிலில் தெறிச்சதே! இசைப்புயலின் இசை பாட்டெல்லாம் பட்டு வெடிச்சதே! நம்ம ஹீரோ நடிச்ச ஒரே டபுள் ஆக்‌ஷன் சினிமான்னு சொன்னா கண்டுபிடிப்பீங்கதானே?

விடைகள்:

1. இந்து, 2. காதலன், 3. நாம் இருவர் நமக்கு இருவர் 4. காதலா காதலா, 5. பெண்ணின் மனதைத் தொட்டு 6. வானத்தைப்போல, 7. வி.ஐ.பி, 8.  மிஸ்டர் ரோமியோ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்