மனசில கோல் போடறாங்க!

லகின் கவர்ச்சிகரமான பெண் கால்பந்து வீராங்கனைகள் 100 பேரை ‘ரேங்கர்’ இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அவ்வளவு பேருக்கும் இங்கே இடமில்லை என்பதால் டாப் 5 பேர் மட்டும் இங்கே...

1. அலெக்ஸ் மார்கன்: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, 26 வயதான அமெரிக்க கால்பந்தாட்ட வீராங்கனை. முன்கள ஆட்டத்தில் பின்னிப் பெடலெடுப்பவர் டயமண்ட் பார் என்ற கலிபோர்னிய மாகாண ஊரில் பிறந்தவர். ஒட்டுமொத்த அனைத்து விளையாட்டுக்களையும் சேர்த்து அழகிகள் லிஸ்ட் எடுத்தால் தரவரிசையில் 2 வது இடமாம்! 30 வயதுக்கு உட்பட்டோருக்கான நடிகைகள் மாடல்கள் பட்டியலில் 132வது இடத்திலும் ‘மேக்ஸிம்’ பத்திரிகையின் உலகின் ஹாட்டஸ்ட் அழகி பட்டியலில் 116 வது இடத்திலும் இடம் பிடித்திருக்கிறார்.

2.  லைசா அன்ட்ரி யோலி :  பிரேசில் நாட்டின் பெண்கள் அணியில் இருக்கும் லைசா அதிகம் நியூட் போட்டோக்களில் தெறிக்கவிட்டு பிரேசிலை ஹாட்டாக வைத்துள்ளார். பெரிதாய் கோல்களை அடிக்காவிட்டாலும் போட்டோக்களாலேயே இணையத்தை ஹாட்டாக வைத்திருப்பதால் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

3. ஏமி டுக்கான்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திரப் பெண்கள் கால்பந்து அணியின் ஆட்டக்காரர். 36 வயதிலும் பிஸியான மாடலாக அசத்தி வருகிறார். காம்பியரிங், ‘வின்’ நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பு, ஸ்விம்மிங் என பொண்ணு புறப்பட்டு வரும் ஏரியாக்கள் அதிகம். இவ்வளவுக்கும் மூன்று குழந்தைகளுக்குத் தாய் இந்த ஏமி!

4. ஹோப் ஸோலோ:  அமெரிக்கப் பெண்கள் கால்பந்து அணியின் ஸ்டார் கோல் கீப்பர். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மங்கை. 2000-லிருந்து தொடர்ந்து ஆடி வரும் இவர் உலகின் நம்பர் ஒன் பெண் கோல்கீப்பராக தன் ஸ்டைலான ஆட்டத்தால் கொண்டாடப்படுகிறார். கோபக்கார கோங்ரா. கணவரில் ஆரம்பித்து யாராவது தன்னைக் கிண்டல் பண்ணினால் கை நீட்டி விடுவார். நிறைய நெகட்டிவ் விமர்சனங்களால் துவைத்து தோரணம் கட்டப்பட்டாலும் இன்னிய தேதியில் வீடியோ கேம், விளம்பரங்கள் என எக்கச்சக்க ஹிட் ஹாட் லேடி பிரபலம் ஸோலோதான்!

5. ஹெதர் மிட்ஸ்: அமெரிக்காவின் 37 வயது தடுப்பாட்டக்காரர். ஃப்ளோரிடாவில் கலக்கி எடுத்தவர் 2000-ல் அமெரிக்கப் பெண்கள் கால்பந்து அணிக்காக விளையாட ஆரம்பித்து 2013 வரை தொடர்ந்து ஸ்டார் ப்ளேயராய்க் கலக்கினார். உலகின் எந்த மூலையில் ஹெதர் விளையாடினாலும் தவறாமல் ஃப்ளைட் ஏறி பார்க்கக்கூடிய கொலை வெறி ரசிகர்களும் இருக்கிறார்களாம்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick