ரொம்ப ரசிக்கிறாங்க!

சினிமாப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறது சகஜம். அப்படி இல்லாத சிலருக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்காங்க. இவங்கதான் அவங்க.

மழை ரமணன்:
இவருடைய ரசிகர்கள் கொஞ்சமா நஞ்சமா? இவருக்கு மட்டும் எப்புடி இம்புட்டு ஆடியன்ஸ் சேர்ந்தாங்கனு யோசிச்சா இப்போகூட ஆச்சரியமா இருக்கு. அவர் ஓய்வு அறிவிச்சதும் போகாதீங்க போகாதீங்கனு ஒண்ணாங்கிளாஸ்ல இருந்து காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் வரைக்கும் கதறி அழுததுதான் ரமணன் சாரோட வெற்றி. இவருடைய மிகப்பெரிய பலமே இவரால் பலன் அடைந்த முன்னாள் மாணவர்கள்தான். சென்னை வெள்ளம் வந்தப்போ அவர் வழக்கம்போல லீவ் விட அதைப் பாராட்டி ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்துச்சு. அது இப்பவும் என் காதுல கேட்குது, ‘புயலின் பூபதியே, அடை மழையின் ஆண்டவனே, அண்ணா யுனிவர்சிட்டியை அதிரவைத்தவனே’னு அட்டகாசமா பேசியிருப்பார் ஒரு தீவிர ரமணன் ரசிகர். இவரைப் பற்றி வரும் மீம்ஸ்களுக்கும் பஞ்சம் இல்லை. ஓய்வுக்குப் பிறகு என்ன பண்ணப்போறீங்க ரமணன் சார்?

சாஷா சேத்ரி: பையன் மாதிரி முடி வெட்டியிருக்கும் க்யூட்டான பொண்ணு, ஒரே ஒரு விளம்பத்துல நடிச்சுது. அதுக்கே இந்தியா முழுக்க ஃபேமஸாகி ஃபேன்ஸ் குவிஞ்சிட்டாங்க. அந்த ஏர்டெல் விளம்பரத்தில் நொடிக்கு நொடி சாஷா முகத்தைக் காட்ட எல்லாருக்கும் அவங்க முகம் பச்சக்குனு ரெஜிஸ்டராகிடுச்சு. இன்னொரு விஷயம் இப்போ சாஷாவின் புகழ் ரிவர்ஸ் கியரில் போய்க்கிட்டு இருக்கு. அது என்னன்னா இந்தியாவிலேயே வெறுப்பான முகம் யாருடையதுனு நடந்த ஒரு சர்வேயில் எல்லாரும் சாஷா பெயரைச்  சொல்லியிருக்காங்க. ஆமா பொழுதேன்னிக்கும் முகத்தைக் காட்டினா கடுப்பாகத்தானே செய்யும்!

ஸ்ரீனிவாசன்: முன்னாள் பி.சி.சி.ஐ, ஐ.சி.சி தலைவர். சென்னை சூப்பர் கிங்ஸ் ஓனர்னு ஏகப்பட்ட பொறுப்புகளை வகித்தவர். தோனிக்கு அடுத்தபடியா னிவாசனுக்குத்தான் ஆடியன்ஸ் அதிகம். நெட்டிசன்ஸ் அவரை செல்லமா சீனினுதான் கூப்பிடுறாங்க. அவருடைய வீட்டுக்கு தோனி வந்து போவதைக்கூட என்னமோ சி.பி.ஐ இன்வெஸ்டிகேஷன் மாதிரி ரகசியமா போட்டோ எடுத்து டிரெண்ட் பண்ணி விடுறாங்க, இந்த ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லைனு தெரிஞ்சதும் இவருடைய ஆடியன்ஸ் பொங்கிட்டாங்க. கிரிக்கெட்டில் என்ன நடந்தாலும் சம்பந்தமே இல்லாம னிவாசனையும் கோர்த்துவிட்டு மீம் போடுற பழக்கம் ரொம்ப நாளா இவங்ககிட்ட இருக்கு. அவர் மேல அம்புட்டு பாசமா இருக்காய்ங்க. எப்போதும் இவரை டிரெண்டிங்கிலேயே வெச்சுருக்காய்ங்க.

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick