அழகு...அரசியல்!

லகம் முழுவதும் இருக்கும் அழகான பெண் அரசியல்வாதிகள் என எட்டுப் பேரை வரிசைப்படுத்தி இருக்கிறது ‘கேப்டிக்’ என்ற தளம். பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கோங்க மக்களே!

அலினா கபேவா, ரஷ்யா: ஜிம்னாஸ்டிக் கிற்குப் பெயர்போன ரஷ்யாவிலிருந்து வந்திருக்கும் இவர் ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கம் பெற்று பெருமை சேர்த்தவர். 2005-ல் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் அரசியலில் குதித்தார். ‘யுனைடெட் ரஷ்யா பார்ட்டி’யில் முக்கியப் பதவி வகித்து வருகிறார். போய் நின்றாலே போதும், ஓட்டு கண்டிப்பாக விழும்!

யுலியா டைமோஷெங்கோ, உக்ரைன்:  இந்தப் பேரழகி உக்ரைன் நாட்டின் பிரதமராக இரண்டு வருடங்கள் கலக்கியவர். அரசியலுக்கு வருவதற்கு முன் பிசினஸ் உலகில் ‘மன்னன்’ பட விஜயசாந்தி ஸ்டைலில் கலக்கியவர். உக்ரைனைக் கலக்கிய ஆரஞ்சுப் புரட்சியின் பிதாமகள் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லூஸி டாரெஸ் கோமஸ், பிலிப்பைன்ஸ்: நம் ஊர் நமீதா ஸ்டைலில் பொழுதுபோக்குத் துறையில் இருந்து அரசியலில் குதித்தவர்தான் லூஸி. மாடல், நடிகை, டி.வி காம்பியர் எனக் கலக்கியவருக்கு கிளாமர் நடிப்பிற்காக எக்கச்சக்க ஃபாலோயர்ஸ் உண்டு. அங்கு லெய்ட்டே என்ற  மாவட்டத்தின் கட்சி நிர்வாகியாகக் கலக்கி எடுக்கிறார்.

யூரி ஃபியூஜிகவா, ஜப்பான்:
‘அரசியலுக்கு இவ்வளவு கூடாது!’ என ஜப்பானில் அதிகம் விமர்சிக்கப்படும் ஜீவன். ஜப்பானின் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்தான் என்றாலும் அழகால் அறியப்படுபவர். 38 வயது கட்சிப் பொறுப்பாளர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலில் பரவ இப்போது பொண்ணுக்கு எக்கச்சக்க எதிர்ப்பு கட்சிக்குள்!

வஞ்சா ஹாட்சோவிக், செர்பியா:  27 வயது செர்பிய அழகி, அண்மையில் ஒரு பத்திரிகைக்குக் கொடுத்திருக்கும் எக்குத்தப்பு போஸ்கள்தான் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அம்மணி அந்நாட்டின் ஆளுங்கட்சியின் அமைச்சரவையில் வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் கௌரவ ஆலோசகராம்!

மரியா கர்ஃபாக்னா, இத்தாலி: உலகின் ஹாட்டஸ்ட் அரசியல்வாதி என மேக்ஸிம் பத்திரிகையால் ரேங்க் கொடுத்து அழைக்கப்படுபவர். பிஸியான மாடலும் கூட. நியூட் போஸ் கொடுத்துப் பரபரப்புக் கிளப்பியவர். ஆனால்,  தற்போது கிளாமர் இமேஜை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டு முழுநேர அசியல்வாதியாகி விட்டார். இத்தாலியின் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு அந்நாட்டின் பெண்கள் முன்னேற்றத்துறை மந்திரியாகி இருக்கிறார்.

ஜூலியா போங்க், ஜெர்மனி: டீனேஜிலேயே அரசியலில் குதித்து விட்டார். 18 வயதிலேயே ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினரானவர். 16 வயதில் மாணவர் அமைப்பின் பேச்சாளராக இடதுசாரிக் கட்சியில் அங்கம் வகித்தார். இப்போது ஜூலியாவுக்கு தனிக்கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு ஜெர்மனியில் செம செல்வாக்கு!

அன்னா மரியா கேலோஜன், எஸ்டோனியா:   எஸ்டோனியப் புனர்வாழ்வுக் கட்சியின் உறுப்பினர் இவர். பலமுறை நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நின்று தோல்வியைத் தழுவி இருந்தாலும் அரசியலையும் தாண்டி ஒரு கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிசினஸ் புலியாகக் கலக்கி வருகிறார்.

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick