பாண்டியர், சோழர், பல்லவர்!

சீமானின் ’நாம் தமிழர்’ இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கலாய்க்கும்விதமாக ‘நாம் சோழர்’, ‘நாம் பாண்டியர்’, ‘நாம் பல்லவர்’ என ஃபேஸ்புக்கில் பக்கங்களை ஆரம்பித்து, கழுவோ கழுவென்று கழுவுகிறார்கள். சாம்பிளுக்கு சில பதிவுகள்!

‘நாம் சோழர்’ ரோதனைகள்:

 ‘நாம் சோழர்’ கட்சியின் முதற்கட்ட கொள்கை வரைவு வெளியிட்ட இரண்டுமணி நேரத்தில் 1000 பார்வையாளர்களைத் தாண்டியிருக்கிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். விரைவில் ‘கபாலி’யின் சாதனையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம். வாருங்கள் சோழர்களே... திமிருடன் தெருவில் நின்று கத்துவோம்!

வேற்று நாட்டில் பிறந்து வாழ்பவர்கள் என்பதால் ‘நாம் சோழர்’ கட்சியில் சேர்வதற்குத் தயக்கம் காட்ட வேண்டாம். இந்தியா முழுவதுமே சோழநாடுதான்! கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேஷியா வரை நம்முடைய சோழநாடுதான் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!

‘நாம் சோழர்’ கட்சியின் கொள்கை வரைவுகளில் சில... தஞ்சாவூர் பெரிய கோயிலை இடித்துவிட்டு அங்கே தானியக் கிடங்கு கட்டுதல், சோழர்காலத் தமிழை மீட்டெடுக்க, எல்லோரும் கல்வெட்டில் இருக்கும் எழுத்துகளைப் போலவே எழுத உத்தரவிடுதல், யாரை ‘வந்தேறிகள்’ எனத் திட்டுவது? என்பதைக் கண்டறிய ஒரு தனிப்படை அமைத்தல்!

  நாம் ஆட்சி செய்த தாய்லாந்து, கம்போடியா, மலேசியா ஆகிய நாடுகளைத் திரும்பக் கைப்பற்றி ஆட்சி அமைத்தல், அங்கே மீன் பிடித்து விற்பனை செய்தல். வீட்டுக்கு ஒரு புலி வளர்த்தல் கட்டாயமாக்கப்படும். அந்தப் புலிகளை தினமும் ஒரு பொது இடத்தில் மேய்க்க ஏற்பாடு செய்யப்படும். முக்கியமாக, ‘புலி மேய்த்தல்’ அரசு வேலையாக்கப்படும்!

‘நாம் சோழர்’ ஆட்சியில் ஆளும் உரிமை சோழர்களுக்கு மட்டுமே! எனவே மக்கள் அனைவரும் மரபணு சோதனை செய்து, அதன் பிரதியை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். ரோட்டில் வந்தேறிகளுடன் சண்டை வரும்போது, இந்த அடையாளம் சரிபார்க்கப்பட்டு ‘வெறும் வாழும் உரிமை’ உள்ள அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்