சினிமால்!

ந்தியில் தயாராகும் கிரிக்கெட் வீரர் அசாருதீனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அசாருதீனாக இம்ரான் ஹஸ்மியும், அவருக்கு ஜோடியாக நர்கிஸ் ஃபக்ரியும் நடித்துள்ளனர். இம்ரான் ஹஸ்மி இருக்கும் படத்தில் முத்தக்காட்சி இல்லைனா எப்படி? படத்தில் நிறைய லிப் லாக் காட்சிகள் இருந்தனவாம். அதில் நடிக்கும்போது இம்ரானுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிப்போய் விட்டாராம் நர்கிஸ். பல காட்சிகளில் நிறைய ரீடேக் வாங்கி முத்தத்தை சரியாக கொடுத்தாராம் நர்கிஸ். முத்தத்தில் சிக்ஸர்!

தமிழில் ஒரு கலக்கு கலக்கிய பத்மபிரியா திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலாகி விட்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்தி வைத்திருந்த அவர், தற்போது மீண்டும் தீவிரமாக நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். முதல் கட்டமாக ‘தி ஆர்பன்’ என்ற இந்திப் படத்தில் நஸ்ருதீன் ஷா மகன் விவான் ஷா ஜோடியாக நடித்து வருகிறார். இதில் இவரோடு கமலினி முகர்ஜி மற்றும் மாளவிகா மேனன் என இன்னும் இரண்டு நாயகிகளும் நடித்து வருகிறார்கள். மூன்று தேசிய விருது பெற்ற ரஞ்சித் ஃபிலிட் இயக்குகிறாராம். விருது வெயிட்டிங்!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களோடு ஜோடி போட்டவர் சமந்தா. ‘கடந்த எட்டு மாதங்களாக ஓய்வே இல்லாமல் நான்கு படங்களில் மாறி மாறி நடித்தேன், சரியாக தூங்கக்கூட நேரம் இல்லை. இந்தக் காலகட்டத்தில் சரியான மகளாக, தோழியாக, காதலியாக இல்லாமல் இருந்துவிட்டேன். இனி கொஞ்சகாலத்துக்குப் புதிதாக படங்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை, ஓய்வு எடுக்கப் போகிறேன்’ என்கிறார் சமந்தா. எந்த நாட்டுக்குப் போறீங்க சமந்தா?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது ஏஜிஎஸ். நாயகி தேர்வு நடைபெற்று வந்தபோது ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் நாயகியான மஞ்சிமா மோகனை நாயகியாக்கலாம் என விஜய் சேதுபதி கே.வி.ஆனந்திடம் சொன்னாராம். கே.வி.ஆனந்தும் ஓகே சொல்ல மஞ்சிமாவை புக் பண்ணியிருக்கிறார்களாம். ஒரு படம் ரிலீஸாகும் முன்பேவா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்