சுமார் மூஞ்சி குமார்ஸ்!

சூடம் ஏற்றி சத்தியம் செஞ்சாலும் நம்பவே முடியாத சில இந்திய சினிமா ஹீரோக்கள் இவர்கள். அதாவது சுமார் மூஞ்சி குமார்ஸ் ஆஃப் இந்தியன் சினிமா. ஆனாலும் அந்தந்த மாநில மக்களிடம் மாஸ் ஹீரோவாய் ஃபார்ம் ஆகி ஆச்சர்யங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள். நம்பிக்கை அதானே எல்லாம்...!

யோகேஷ், கன்னட சினிமாவின் யூத் ஹீரோ:

துனியா விஜய்யின் மருமகன்தான் இவர். மாமா படத்தில் குட்டி ரோலில் நடித்து அறிமுகமானவருக்கு ‘நந்தா லவ்ஸ் நந்திதா’, ‘அம்பாரி’, ‘கிருஷ்ணன் லவ் ஸ்டோரி’, ‘தூள்’, ‘பஜ்ரங்கி’ என அடுத்தடுத்த ஹிட்ஸ் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. புனீத் ராஜ்குமார் நம் ஊர் ‘நாடோடிகள்’ படத்தை ‘ஹுடுகாரு’வாக அங்கே ரீமேக் செய்தபோது அதில் நடித்து கன்னட மக்கள் மனதில் நின்றுவிட்டார். இப்போது எக்கச்சக்கப் படங்கள் இவர் கையில்!

பிரதமேஷ் பரப், மராத்தி சினிமாவின் யூத் ஸ்டார்:

‘பலக் பாலக்’ என்ற ஸ்கூல் பசங்க படத்தில் சிறு வேடத்தில் வந்த பிரதமேஷை, சைத்து தகடு சாந்தாராம் என்ற டைரக்டர் இயக்கிய ‘டைம்பாஸ்’ என்ற படம் மராத்தி சினிமாவின் இன்றைய தேதி வரை செம கலெக்‌ஷன் சினிமா. சூப்பர் டூப்பர் ஹிட்டானதால் ‘டைம்பாஸ் பார்ட்2’ வேறு எடுத்து அதையும் பேய் ஹிட் கொடுத்து மாஸ் காட்டினார் 22 வயதே ஆன இந்தச் சுட்டி ஹீரோ. இதனால் பாலிவுட் வாய்ப்பு கிடைக்க இந்தி ‘த்ருஷ்யம்’ படத்தில் அஜய் தேவ்கனோடு கேபிள் டி.வி-யில் வேலை பார்க்கும் பையனாக நடித்திருந்தார். இப்போது பிரதமேஷ் மராத்தி சினிமாவின் முக்கிய ஹீரோ!

பவண் சிங், போஜ்பூரி சினிமாவின் மல்ட்டி டேலன்டட் ஸ்டார்:

பாடகராய், இசையமைப்பாளராய் அறிமுகமானவருக்கு 2007-ல் ‘ராஜ்குமார்’ என்ற படத்தின் மூலம் ஏற்றம் கிடைத்தது. 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர்தான் போஜ்பூரியின் நம்பர் ஒன் ஸ்டார்!

துனியா விஜய், கன்னட சினிமாவின் மாஸ் ஸ்டார்:

42 வயதாகும் துனியா விஜய்க்கு இப்போது கருஞ்சிறுத்தை, ப்ளாக் கோப்ரா எனப் பட்டப்பெயர்கள் உண்டு. கன்னட சினிமாவின் விஷால் இவர்தான். ஆக்‌ஷன் படங்கள் மாஸ் ஹிட் அடிப்பதால் தயாரிப்பளர்களின் செல்லப் பிள்ளையாகிவிட்டார். ‘துனியா’ இவர் கேரியரில் மெகா ஹிட் படமாக ஆனதால் அந்தப் பெயர் இவர் பெயரோடு சேர்ந்துவிட்டது. போன வருடம் ரிலீஸான ‘ஆர்எக்ஸ் சூரி’, ‘ரிங் ரோடு’ போன்ற படங்கள் மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது!

சப்யாசாச்சி மிஸ்ரா, ஒடிசா சினிமா மாஸ் ஹீரோ:

ஒடிசா மாநிலத்தின் நம்பர் ஒன் மாஸ் ஹீரோ இன்றைய தேதியில் இவர் மட்டும்தான். ஒடிய மொழியில் இருந்து வருடந்தோறும் ஃபிலிம்ஃபேர் விருது வாங்கும் ஒரே ஹீரோ. அறிமுகமான முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த சூப்பர் ஸ்டார். பாடகராகவும் கலக்குவதால் மளமளவென பெரிய ஸ்டாராய் தவிர்க்க முடியாத இடத்துக்கு வளர்ந்துவிட்டார். இப்போது ஐ.பி.எல் போட்டிகளில் டெக்கான் சார்சர்ஸ் அணியின் தூதுவர் இவர்தான்!

கேசரிலால் யாதவ், போஜ்பூரி சினிமாவின் சூப்பர் ஸ்டார்:

பாட்டும், ஆக்‌ஷனும், டான்ஸும் கலந்த யூத் ஹீரோ. 2012-ல் ‘சாஜன் சாலே சாசுரல்’ என்ற படம் மெகா ஹிட் அடிக்க போஜ்பூரி சினிமாவில் நிறைய ரசிகர்களைக் கொண்ட நடிகராய் வளர்ந்துவிட்டார். ஜார்கண்ட், பீஹாரில் இவர் படங்களுக்கு செம மவுசு இப்போது!

ஆகவே மக்களே நமக்கும் சான்ஸ் இருக்கு!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick