“சென்னை ரசிகர்களை லவ் பண்றேன்!”

ஹாட் சென்னையில், ஃபிரெஷ்ஷாக நடித்துக்கொண்டிருக்கிறார் சஞ்சிதா ஷெட்டி. ‘என்னோடு விளையாடு’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘ரம்’ என படங்கள் வரிசைகட்டி நிற்கும் இந்த ஆப்பிள் கன்ன அழகியுடன் ஒரு சாட்டிங்!

‘‘மூணு வருடங்களில் நாலு படங்கள்தான் பண்ணியிருக்கேன். தொடர்ந்து படம் பண்ணிக்கிட்டே இருக்கிறதுல அர்த்தமில்லை. கொஞ்சமா நடிச்சாலும், நச்சுனு கேரக்டர்ஸ் பிடிக்கணும். ‘என்கிட்ட மோதாதே’, ‘என்னோடு விளையாடு’ ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. சில படங்கள் ஷூட்டிங் போய்க்கிட்டு இருக்கு!’’ அழகு ஆரம்பிக்கும் தொனிக்கே ஆயிரம் லைக்ஸ்.

‘‘ஷூட்டிங் இருந்தா மட்டும்தான் சென்னையை எட்டிப்பார்ப்பீங்களாமே?”

‘‘இதையெல்லாமா பேசிக்கிறாங்க? பெங்களூர்ல வீடு இருக்கிறதனால, ஷூட்டிங் முடிஞ்சதும் வீட்டுக்கு ஓடிடுவேன். ஆரம்பத்துல கஷ்டமாதான் இருந்துச்சு. வீட்டுக்கு மூத்த பொண்ணு நான். ஒரு தம்பி, ஒரு தங்கச்சி. இவங்களை நல்லபடியா பார்த்துக்கணும்னா, நாம ஓடிக்கிட்டுதானே இருக்கணும்?’’

‘‘சினிமாவை ஏன் தேர்ந்தெடுத்தீங்க?”

‘‘காரணம் தெரியலை. நான் செம கியூட்டா இருக்கேன்னு ஃப்ரெண்ட்ஸ், வீட்டுல இருக்கிறவங்க சொல்வாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான், ‘சினிமாவுக்கு முயற்சி பண்ணிப்பாரு’னு சொல்ற அளவுக்கு வளர்ந்துடுச்சு. முதலில் ‘தில்லாலங்கடி’யில ஒரு கேரக்டர் கிடைச்சது, அந்த ‘அம்மு’வை ரசிகர்களுக்கும் பிடிச்சுப்போச்சா? சினிமாவே ஃலைப் ஆகிடுச்சு!’’

‘‘சென்னை ரசிகர்கள் என்ன சொல்றாங்க?”

‘‘அவங்க வீட்டுப் பொண்ணு மாதிரி நினைச்சு கட்டிப்பிடிச்சுப் பேசுறாங்க. ஒருநாள் ஷூட்டிங்ல இருக்கும்போது, ‘ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கிறோமே?’னு குடும்பத்தோட வருவாங்க. இதையெல்லாம் நினைச்சாலே சந்தோஷமா இருக்கும். ஓப்பனா சொன்னா, சென்னை ரசிகர்களுக்காகவே தமிழ்ல நிறையப் படங்கள்ல நடிக்கணும். ஏன்னா, என்னை ரசிகர்கள் எவ்ளோ லவ் பண்றாங்களோ, அதுக்கு மேல நான் அவங்களை லவ் பண்றேன்.’’

‘‘எல்லா படத்துலேயும் மாடர்ன் பொண்ணாவே தலை காட்டுறீங்களே?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்