ஆஃப் த ரெக்கார்டு!

ங்களகரமான நடிகை இந்தியில் நடித்த இரண்டு படங்களும் வெளியாகாமல் இழுத்துக் கொண்டு இருப்பதாலும், தமிழில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததாலும் மாஸ்டர் நடிகரைச் சந்தித்து வாய்ப்புக் கேட்டிருக்கிறார். அவர் தன் படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு நடனம் ஆட வாய்ப்புக் கொடுத்திருக்கிறாராம்.

தான் கதாநாயகியாக நடித்த முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் படுதோல்வியைத் தழுவி வருவதால், இனிமேல் வெளியாகும் தன் படங்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என வேண்டி மும்பைக்குப் போய் மந்திரித்து தாயத்து கட்டிக்கொண்டு வந்திருக்கிறாராம் ஸ்வீட் ஸ்டால் நடிகை.

கோட் நடிகர் நடிக்கும் புதிய படத்தில் சாண்டல் காமெடியனை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும், அவரிடம் பேசுங்கள் என இயக்குநருக்குக் கட்டளை போட்டிருக்கிறாராம் நடிகர். காமெடியன் ஹீரோ ஆனதால், நம் படத்தில் காமெடியனாக நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வியோடு காமெடியனைத் தேடிப் போயிருக்கிறாராம் இயக்குநர்.

சமூக வலைதளங்களில் தரைலோக்கலாக இறங்கி சண்டை போடும் இசை நடிகர் தன் படங்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது அவரே வெளியிட்டு வந்தார். இதனால் கடுப்பான லண்டன் தயாரிப்பு நிறுவனம் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள், எங்களைக் கேட்காமல் படத்தைப் பற்றித் தகவல் எதையும் வெளியிடாதீர்கள் என எச்சரித்திருக்கிறார்களாம்.

இரண்டு நடிகைகளின் பெயர்கொண்ட படத்தில் நடித்த நாயகிக்குத் தமிழில் ஒரே ஒரு படம் மட்டுமே ரிலீஸுக்கு இருக்கிறதாம். நடித்த மற்ற இரண்டு படங்கள் ஃபைனான்ஸ் பிரச்னையில் முடங்கிக் கிடக்கிறதாம். இதனால் தன் தாய்மொழியான தெலுங்கில் வேறு பெயரில் நடிக்க வாய்ப்புத் தேடிவருகிறாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்