“கட்சி ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பேன்!”

டிகர், இயக்குநர், சமூக ஆர்வலர்... எனப் பன்முகம் கொண்ட கிட்டி (எ) கிருஷ்ணமூர்த்தி. இந்தத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். இந்த ‘திடீர் அரசியல்’ களம் குறித்து, அவரைச் சந்தித்துப் பேசினேன். ‘‘தொலைநோக்கு கண்ணோட்டத்துடன்தான், வேளச்சேரி தொகுதியில் சுயேட்சை வேட்பாளரா போட்டியிடுறேன்’’ என ஆரம்பத்திலேயே ட்விஸ்ட் கொடுக்கிறார்.

‘‘கடந்த 40 வருடங்களா மனிதர்கள், மனிதவளம், மனிதநேயம்... இதுதான் என்னுடைய களம். கல்லூரியில் படிச்சதும் மனிதவள மேம்பாடுதான். வேலை பார்த்ததும் மனிதவள மேம்பாட்டுத் துறைதான். சட்டை மாதிரி சாதி, மதம், இனம், மொழினு ஆளாளுக்கு மாட்டிக்கிட்டுத் திரிஞ்சாலும், எல்லோருமே மனிதர்கள்தான்! இந்தச் சட்டைக்காக சண்டை போட்டுக்கிட்டு பிரிவு, வேற்றுமையோட வாழாம, ஒற்றுமையா வாழணும், ஒற்றுமையா இருந்து முன்னேறணும்னு பல மேடைகள்ல பேசுறேன். அறம் சார்ந்த, மனிதநேயம் சார்ந்த சமுதாயத்தை உருவாக்குறதுதான் என்னோட பிரதான நோக்கம். நான் இயக்குன ‘தசரதன்’ படத்துல சமையலைப் பற்றி ஒரு வசனம் வரும். ‘சமையல்ங்கிறது காய்கறி இல்லை. கரிசனம்’. நேசம், பாசம் எல்லாம் கலந்து சமைச்சாதான் அந்தச் சாப்பாடு நல்லா இருக்கும். ஸோ, மனிதர்களை மனிதர்களா மட்டுமே பார்த்துக்கிட்டு இருக்கிற, மனிதர்களாகப் பார்த்து மட்டுமே பழகிக்கிட்டு இருக்கிற, அதுக்காகவே செயல்பட்டுக்கிட்டு இருக்கிற நான் இந்தத் தேர்தல்ல வேட்பாளரா களமிறங்கினது எனக்குப் பெரிய ஆச்சரியமான விஷயமா படலை’’ என்கிறார், கிட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்