கதை விடுறாங்க!

‘வாசலில் ஓட்டுக் கேட்டு வந்திருந்த அந்த நபரைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் தலைகால் புரியாமல் தடுமாறி விழுந்தான் தனபால்!’

- இந்த ஒரு வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ..!

குருசந்திரன்:
ஏனெனில், வந்த நபர் ‘மதுவை ஒழிக்க எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று சொல்லிவிட்டு ஒரு குவாட்டர் பாட்டிலை அவன் கையில் திணித்துவிட்டு, சைடு டிஷ்ஷுக்கு நூறு ரூபாயும் கொடுத்தார்.

ஏந்தல் இளங்கோ: 
வந்தது கஸ்தூரி பாட்டி. இரண்டு கைகளையும் தூக்கி, ஒரு கையில் இரண்டு விரலையும், இன்னொரு கையில் ஐந்து விரலையும் நீட்டிக்காட்டி ஒரே சமயத்தில் ரெண்டு கட்சிகளுக்கு ஓட்டு கேட்டார்.

ராஜ்குமார் ராஜேந்திரன்: ஏனெனில், வந்தவன் ஆறு மாதம் முன்பு தனபாலிடம் வட்டிக்கு 5,000 ரூபாய் கடன் வாங்கிய கோபால். தனபாலிடம் கடன் வாங்கிய பணத்தை வட்டி, கந்துவட்டி, ஸ்பீடு வட்டி, செகண்ட் வட்டி என வட்டிக்கு விட்டு லட்சாதிபதியாகி... இன்று வேட்பாளரும் ஆகிவிட்டான்.

தவராஜ்குமார்: வந்தவர், தனபாலுக்குக் கடன் கொடுத்த கந்துவட்டி கபாலி. போனவராம் வரைக் கடனைத் திருப்பிக்கேட்டு நச்சரித்தவர், வேட்பாளர் ஆகிவிட்டதால் ஓட்டுக்காகக் கொடுக்கும் பணத்தில் சரிசெய்து கொள்ளலாம் எனச் சிரித்தார். தலைகால் புரியாத சந்தோஷத்தில் தடுமாறி விழுந்தான் தனபால்.

பட்டமுருகன்: ஏனெனில், வந்தவர் கையில் வீட்டில் இருக்கும் நான்கு பேருக்கும் சேர்த்து 2,000 ரூபாய்க்கான செக் இருந்தது.

மணிகண்டன்:
வந்தவர் நம்ம ஆதீனம். சிவபெருமாள் தன் கனவில் வந்து சொன்னதாகச் சொல்லி, 1,000  ரூபாய் கொடுத்துவிட்டு மறக்காக நம்ம கட்சிக்கு ஓட்டுப் போட்டுடு என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

சரவணக்குமார்: ஏனெனில், வந்தவன் 500 ரூபாய் நோட்டில் காந்தியின் படத்திற்கு மேலே அம்மா ஸ்டிக்கரை ஒட்டிக்கொடுத்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்