இடிக்கிறதுக்கு எத்தனைக் காரணங்கள்!

ங்க வண்டியை எங்கேயாவது, இல்லை யார் மேலேயாவது கொண்டுபோய் செருகிட்டீங்கனா என்ன பண்ணுவீங்க..? போலீஸ்காரர்களிடமோ, இன்ஷூரன்ஸ்காரர்களிடமோ கண்ணீர் விட்டுக் கதறுவீங்க. இல்லைனா, ‘கரகாட்டக்காரன்’ செந்தில் மாதிரி கம்முனு கையைக் கட்டிக்கிட்டு சோகமா நிற்பீங்க. ஆனால், வெளிநாடுகளில் எப்படியெல்லாம் டைப் டைப்பா கப்பித்தனமா காரணம் சொல்லியிருக்காங்க தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க...

‘நான் என்னைக்கும் போல வேலைக்குக் கிளம்பிப் போய்க்கிட்டு இருந்தேன். ஆனால், அன்னைக்குனு பார்த்து அந்த பஸ் அஞ்சு நிமிஷம் சீக்கிரமாவே வந்துடுச்சு. அதனால்தான் அந்த பஸ் மேலே வண்டியை விட்டேன். அது என் தப்பு இல்லை, சீக்கிரமாவே வந்தது அந்த பஸ்ஸின் தப்பு.’ #எங்கேர்ந்துடா கிளம்புறீங்க?

‘ரோட்ல நின்னுட்டு இருந்த மனுஷன் ரொம்ப நேரமா எந்தப் பக்கம் போறதுனு தெரியாமல் குழம்பிப் போய் நின்னுட்டு இருந்தார், நகருவது போல் தெரியலை. அதான் வண்டியை அவர் மேல விட்டேன்.’ #மனுசனா நீ?

விபத்துக்கு யார் காரணம்னு எனக்கு சொல்லத் தெரியலை. ஏன்னா, நான் எதையும் பார்க்கவேயில்லை. நம்புங்க ப்ளீஸ்...’ #எதையும் பார்க்காததுதான் காரணமே!

‘நான் வேகமா வண்டி ஓட்டினதுக்கு மன்னிச்சுடுங்க ஆபீசர்ஸ். கண்ணாடி போடாததால் ஸ்பீடாமீட்டரில் வண்டி எவ்வளவு வேகத்தில் போய்கிட்டு இருக்குனு என்னால பார்க்க முடியலை. கண்ணாடி போட்டால் தான் எனக்குக் கண்ணே தெரியும்.’ #முதல்ல அதைப் போடுய்யா பிஸ்கோத்து!

‘ரோடு வளைவா இருந்தது சார். அதுதான் விபத்துக்குக் காரணம்.’ # அடேய்...ஏலியன் குட்டியே, நீ நேரா இருந்தாலும் மோதுவே!

‘சாலையின் ஓரமா நடந்து போய்க்கிட்டு இருந்த ஒருத்தன் திடீர்னு என் காரை இடிச்சான். இடிச்சது மட்டுமில்லாமல் என் காருக்கு அடியில் வேற போயிட்டான். ராஸ்கல்...’ #பார்ரா!

‘என் கார் பக்கத்தில் ஒரு மாடு நின்னுட்டு இருந்துச்சு. அதைக் கண்டிப்பா ஏதாவது ஒரு பூச்சி ‘கிச்சு கிச்சு’ மூட்டியிருக்கணும், அதான் என் காரை முட்டித் தள்ளிடுச்சு.’ #உனக்கு கும்பிபாகம்தான்டி!

‘ரோட்டுல நின்னுட்டு இருந்த ஒருத்தரை நான் காரை வெச்சு இடிச்சது உண்மைதான். ஆனால், நான் இடிச்சதுக்குப் பிறகு அவர் எழுந்திருச்சார். அதனால்தான் மறுபடியும் அவர் இடிபட வேண்டியதா போச்சு.’ #டேய்... இது கொலை முயற்சிடா!

‘என் மனைவி என்னைவிட்டு ஓடிப் போயிட்டா. அதனால்தான், நீங்க அவளைக் கண்டுபிடிச்சு மறுபடியும் என்கிட்ட கூப்பிட்டு வர்றீங்களோனு பயந்து, நீங்க நிற்கச் சொல்லியும் நான் நிற்காமல் போயிட்டேன் போலீஸ்கார்.’ #நியாயம்தான்!

‘இந்த விபத்துக்குக் காரணம், நான் வண்டியில் போய்க்கிட்டு இருக்கும்போது போன வாரம் நான் இடிச்ச ஒருத்தரைப் பார்த்தேன், சரி நம்மை ஞாபகம் வெச்சுருக்காரா?னு பார்க்கக் கை காட்டினேன். எதிர்ல வந்தவரைப் பார்க்கலை. என்னை மன்னிச்சுடுங்க சார்...’ #இதே வேலையாத்தான் திரியறியா?

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick