‘என்னங்க’ - வார்த்தை இல்லை எமோஷன்!

டைனோசர்கள் உயிரோடு இருந்ததாகச் சொல்லப்பட்ட காலத்தில் நம்ம மாதர் குலத்தோர் தங்களோட கணவர்களை ‘என்னங்க’னுதான் கூப்பிடுவாங்களாம். என்னங்கனா என்னன்னு மட்டும் அர்த்தம் கிடையாது. அதுக்குப் பல அர்த்தங்கள் இருக்கு.

பாத்ரூம்லேர்ந்து என்னங்கன்னு கூப்பிட்டா பல்லி, கரப்பான்பூச்சி ஓட்டணும்னு அர்த்தம்.

ஜவுளிக்கடையில கூப்பிட்டா புடவை காஸ்ட்லியா இருக்கு. ஏ.டி.எம் போய்ட்டு வாங்கனு அர்த்தம்.

கிச்சன்லேர்ந்து என்னங்கனு சத்தமா கூப்பிட்டா சோறு ரெடி ஆகிடுச்சு. ஆறிப் போறதுக்குள்ள வந்து கொட்டிக்கோன்னு அர்த்தம். அதே மெதுவா கூப்பிட்டா உளுத்தம்பருப்பு தீர்ந்து போச்சு. போயி வாங்கிட்டு வாங்கனு அர்த்தம்.

வீட்டு வாசல்ல ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிக்கிட்டு இருக்கும்போது என்னங்கனு கூப்பிட்டா, ‘உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையாடா’னு உங்க நட்பு வட்டாரத்துக்கு அர்ச்சனை நடக்குதுனு அர்த்தம்.

பீரோ கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு என்னங்கனு கூப்பிட்டா ‘உன்னாலதான் புடவையே அழகா இருக்குடி செல்லம்’னு நீங்க பிட்டு போடணும்னு அர்த்தம்.

விசேஷ வீட்டுல என்னங்கனு கூப்பிட்டா ‘என் சொந்தக்காரங்க வந்துருக்காங்க. வந்து பார்த்துட்டு உன் மானத்தைக் காப்பாத்திக்கோ’னு அர்த்தம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்