டைட்டில் பிரச்னை!

தயநிதி ‘மனிதன்’னு தன் படத்துக்குப் பெயர் வைத்தாலும். மனிதன் என்பது தமிழ்ச் சொல் கிடையாதுனு கேட் போடுறாங்க. அதனால், டைம்பாஸ் சார்பாக உதயநிதிக்கு சில டைட்டில்களை சிபாரிசு பண்றோம்...

‘அ, ஆ, உ, ஊ, ஒள, ஃ’னு வெறும் தமிழ் எழுத்துகளை மட்டும் டைட்டிலாக வைக்கலாம். ‘எ, இ, ஐ, ஓ’ போன்ற எழுத்துகளை டைட்டிலாக வைத்தால் அதை ஆங்கில எழுத்துனு சொல்லிடுவாங்க. கேர்ஃபுல்!

‘அம்மா’னு வைக்கலாம், பிரச்னை வராது. படத்தில் அம்மா ரெஃபரென்ஸ் வைத்தால் எந்தப் பிரச்னையுமே வராது.

‘வெஞ்சனம், ‘வெங்கப்பய’ போன்ற வழக்கொழிந்த தமிழ் வார்த்தைகளைத் தேடி எடுத்து டைட்டில் வைக்கலாம்.

படத்திற்கு ‘ஜெயலலிதா’, ‘விந்தியா’, ‘ஆனந்த்ராஜ்’, ‘ஹூசைனி’ போன்ற பெயர்களை டைட்டிலாக வைக்கலாம். அதற்காக ஒரு பாசத்தில் ‘கருணாநிதி’, ‘ஸ்டாலின்’ என டைட்டில் வைத்தால் நாங்கள் பொறுப்பு கிடையாது.

‘11, 110, 2’ என எண்களையே பெயராக வைக்கலாம். ‘இரட்டை’ என வைத்தால் இன்னும் நன்று.

‘பறக்கும் குதிரை’, ‘ஒட்டி’, ‘உலங்கு வானூர்தி’ போன்ற தூய தமிழ்ச் சொற்களில் டைட்டில் வைக்கலாம்.

‘தமிழ்’, ‘தமிழ்நாடு’, ‘தமிழகம்’ போன்ற வார்த்தைகளை டைட்டிலாக வைக்கலாம். இதையும் தமிழ் வார்த்தை இல்லைனு சொன்னா, இந்த நாட்டைவிட்டுப் போறதைத் தவிர வேறு வழியே இல்லைண்ணே!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick