சினிமா விடுகதை!

ஜோதிகாவின் சினிமாக்கள்தான் இந்த வார சினிமா விடுகதைகளுக்கான விடைகள் பாஸ்! கமான் ஸ்டார்ட்ஸ் நவ்!

1. அனிமல்ஸ் டைரக்டரின் படம். கூடவே வாழ்க்கைத்துணையும் இணைந்த படம். கரக் மொறுக் குரலில் எல்லோரையும் சிரிக்க வைத்த ஜோ, ஜோவாவே வந்தாரே. காமிக்ஸ் பேர் சொன்னா டைட்டில் புரியும். என்ன படம் பாஸ்?

2. ஒவ்வொரு வீட்டுக்கும் உண்டு. முகத்தில் கோடு போட்டாலும் வரும் இது! அல்ட்டிமேட்டும் ஒளி வித்தகரும் இணைந்த படம் வந்தப்போ ஒய்2கே பிரச்னையும் இருந்தது! ஆமா, என்ன படம் இது?

3. முண்டக்கண்ணியை தெரியாதவங்க இருந்தாக்கா சொல். படம் பட்டிதொட்டி எங்கும் அடிச்சதே ஜில். அருவா மீசை ஆறுமுகத்தையும் அமைச்சர் காளைபாண்டியையும் மறக்க முடியுமா சொல்லுங்க!

4. கந்த சஷ்டிக்கும் போலீஸ் முஷ்டிக்கும் கனெக்‌ஷன் உண்டு. நிஜ ஜோடி நடிச்ச படத்துல நெகட்டிவ் எண்டு! காக்கி காதலா, காக்கிக்கும் காதலானு பேச வெச்ச படத்துல எல்லாமே ‘கா கா’ தான்!

5. சிங்கீதம் சீனிவாச ராவ் டைரக்‌ஷன் பண்ண படத்துக்கும் நம்ம டைம்பாஸ் புக்குக்கும் பெரிய கனெக்‌ஷன் உண்டு. எல்லாமே சின்னதா இருந்தா என்னவாகும் சொல்லுங்க? வெள்ளை ஹீரோ நடிச்ச படம் மூணு மொழியில ரிலீஸ் ஆகியும் பெரிசா ஓடலைங்க. என்ன படம்ங்க? 

6. விரல் வித்தைக்காரரோட ஹிட் சினிமாக்கள்ல ஒண்ணு.  சின்ஸியரா காதலிக்கிற மைதிலியா நடிச்சாங்க இந்தப் பொண்ணு. இரட்டைவேடப் படத்துல சிங்கிள் ஹீரோயினா நடிச்சதும் படம் பூரா பொண்ணுங்களை கெட்டவங்களா காட்டுனதையும் மறக்க முடியுமா சொல்லுங்க?

7. சூப்பரோட நடிச்சும் சூப்பருக்கு இவங்க ஜோடி இல்லை. சூப்பரா நடிச்சும் என்ன கொடுமைனு சொல்ல வெச்சாங்க. கலகலனு சிரிக்க வெச்ச படத்துல லக லகவும் உண்டு மக்களே. என்ன படம் இது?

8.
வயசைச் சொல்லும் படத்தில் செகண்ட் இன்னிங்ஸ் ஆட்டம். படத்துல போட்டாங்க மொட்டை மாடித் தோட்டம். மலையாள டைரக்டரின் ஹிட் படத்துக்கு ஹிட் சேர்த்தாங்க அம்மணி. அதனால பேர் சொல்லுங்க கண்மணி!

விடைகள்: 1. மாயாவி 2. முகவரி 3. தூள் 4. காக்க காக்க 5. லிட்டில் ஜான் 6. மன்மதன் 7. சந்திரமுகி 8. 36 வயதினிலே

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்