புகை இங்கே இல்லை பகை!

டிராகன் ப்ரீத் என்ற ஐஸ்கிரீம் சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிகப் பிரபலம். இந்த ஐஸ்கிரீமை முதல் முறையா சாப்பிடுறவங்க கொஞ்சம் பயந்துதான் போவாங்க. காரணம், இதை  வாயில் வெச்ச உடனே ‘ஏய்’ படத்தில் வடிவேலு எரியும் கற்பூரத்தை விழுங்கி வாய் வழியா குபுகுபுனு புகை விடுவாரே, அதே மாதிரி புகை வரும். இதற்கு டிராகன் ப்ரீத் எனப் பெயர் வரக் காரணம், சீனர்கள் நம்பும் டிராகன் வாயைத் திறந்து மூச்சுவிட்டால் தீப்பிழம்பு வெளியேறுவதைப்போல இந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டதும் அதே மாதிரி புகை வந்ததால் இப்படிப் பெயர் வெச்சுட்டாங்க.

சீனாவில் கிடைக்கும் போதைப் பொருட்களில், போதையை அதிகரிப்பதற்கு ஐந்து விதமான மசாலாப் பொருட்களை பயன்படுத்துறாங்க. அப்படியான ஒரு மசாலாப் பொருளைத்தான் இந்த ஐஸ்கிரீமிலும் கலக்கிறார்களாம். சாப்பிட்டதும் கிக்காக இருப்பதற்காக இப்படி செய்றாங்க. சரி இதை எப்படி சாப்பிடுறாங்க? கெட்டியாக உறைந்து போய் இருக்கும் ஐஸைக் கையில் படாமல் குச்சியில் எடுத்து வாயில் போடுறாங்க. அதை அடுப்பில் இருக்கும் கங்கு போல ஊதி ஊதி சாப்பிடுறாங்க. லிக்யூட் நைட்ரஜனை இதனுடன் மிக்ஸ் பண்ணுவதுதான் இப்படி கண்டபடி புகை வரக் காரணமாம்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick