சினிமால்!

‘அரண்மனை 2’, ‘நாயகி’ எனப் பேய் படங்களையும் ஒரு கை பார்க்கத் தொடங்கிவிட்ட த்ரிஷா, தற்போது இன்னும் ஒரு பேய் படத்தில் மிரட்ட இருக்கிறாராம். ‘மதுர’, ‘மிரட்டல்’ படங்களை இயக்கிய மாதேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் த்ரிஷாதான் பேய். அதுவும் இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறாராம். ‘சிங்கம் 2’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்கிறது. முழுக்க வெளிநாடுகளில் உருவாகிறது படம். ஒரு பேய்க்கே முடியல, இதுல ரெண்டு பேயா?

‘சபாஷ் நாயுடு’ என்று பெயரிலேயே கலவரத்தை ஆரம்பித்து வைத்த கமல்ஹாசன், ஜூலை மாதத்துக்குள் மொத்தப் படத்தையும் முடிக்க இருக்கிறார். அந்த காமெடிப் படத்தை முடித்த கையோடு தன் திரைக்கதை, வசனத்தில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்கிறாராம். இதற்காக தற்போதே முன் தயாரிப்புப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறாராம். விமானக் கடத்தலை மையமாகக்கொண்ட விறு விறு ஆக்‌ஷன் படம் என்கிறார்கள். ஒரு பிடி காமெடி, ஒரு பிடி அடிதடி!

‘புலி’, ‘போக்கிரி ராஜா’ படங்களில் படுதோல்வியைச் சந்தித்தாலும் மனம் தளராமல் தனது அடுத்த தயாரிப்பில் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார். இயக்குநர் சாமி இயக்க இருக்கும் ‘மிருகம் 2’ படத்தைத் தயாரிக்கிறார். நாயகி முடிவாகாத இந்தப் படத்தில் ஆதி நாயகனாகவும், சோனா முக்கிய வேடத்திலும் நடிப்பார்கள் என சொல்கிறார்கள். ஆதி பாதி, மிருகம் மீதி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்