சுட்ட படம்

ந்த வார ‘சுட்ட படம்’ தமிழ் சினிமாவின் டெரர் படங்களில் ஒன்றான ‘நாளை மனிதன்.’ 1989-ல் ரிலீஸான இந்தப் படம் ஹாலிவுட் ஆக்‌ஷன் ஸ்டார் சக் நோரிஸ் நடித்த ‘சைலன்ட் ரேஜ்’ என்ற படத்தின் அப்பட்டமான தழுவல். ஒரிஜினல் படத்தின் கதை?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் சிறு நகரம் அது. ஜான் என்பவன், தான் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளரையும் அவரது குடும்பத்தையும் கொன்றுவிடுகிறான். ஷெரீஃபாக இருக்கும் சக் நோரிஸும் அவரது உதவியாளர் ஸ்டீபன் ஃபர்ஸ்ட்டும் ஜானைக் கைது செய்கிறார்கள். ஆனால் சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில் கார் கதவை உடைத்து தப்பிக்கிறான். தற்காப்புக்காக சக் நோரிஸ் அவனைத் துப்பாக்கியால் சுடுகிறார். காயம்பட்டவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு ஜானுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் டாக்டர் பிலிப் மற்றும் டாக்டர் பால், தாங்கள் கண்டுபிடித்த ‘ஜெனிடிகல்’ மருந்தை ஜான் உடலில் செலுத்திப் பரிசோதிக்க முடிவெடுக்கிறார்கள். சீனியர் டாக்டரான தாமஸ் அதற்குக் கண்டனம் தெரிவிக்கிறார். ஆனாலும் டாக்டர் தாமஸ் சென்றதும் அவர்கள் இருவரும் அந்த மருந்தை ஜான் உடலுக்குள் செலுத்துகிறார்கள். கண் விழிக்கும் ஜான் தனிமையில் பரிசோதனைக் கூடத்தில் கிடக்கிறான். அங்கிருந்து கிளம்பும் அவன் டாக்டர் தாமஸைத் தேடிப் போகிறான். அங்கு அவனைக் கொல்ல முற்படும் தாமஸையும் அவர் மனைவியையும் கொடூரமாகக் கொல்கிறான். போலீஸ் அதிகாரி சக் நோரிஸ் வருவதற்குள் தப்பித்து விடுகிறான். மருத்துவ ஆய்வகத்துக்கு வரும் ஜான் தன் காயங்களுக்கு மருந்து கொடுக்குமாறு கேட்கிறான். ஆனாலும் டாக்டர் பிலிப்பும், பாலும் ஜானைக் குணப்படுத்த வழி தெரியாமல் குழம்புகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்