டெரர் அழகிகள்!

 

டிகைகளை எப்போதும் தேவதைகள் என்று டைம்பாஸில் வர்ணிப்போம். சில சமயங்களில் அந்தத் தேவதைகள் பொங்கி எழுந்து ‘பியூட்டிஃபுல்’ ரௌடிகளாகவே மாறிவிடுவார்கள். அவர்களில் சிலர்...

மல்லிகா ஷெராவத்: தேசியக்கொடியை அரைகுறை ஆடையாகப் போர்த்திக்கொண்டு நடித்தது, திருமண வாழ்க்கை குறித்த அளவுக்கதிகமான சஸ்பென்ஸ் வைத்துக் குழப்புவது என எப்போதும் சர்ச்சை நாயகி. ‘மர்டர்’ படத்தில் ஆரம்பித்து ஜாக்கிசானோடு நடித்து கலக்கியது என மீடியா அட்டென்ஷனில் இருக்கும் மல்லிகா, பாலிவுட்டின் செக்ஸ் சிம்பலாகக் கொண்டாடப்படுபவர் என்பது நமக்குத் தெரியும். தெரியாத விஷயம், திருமண வாழ்க்கைக் குறித்து யாரேனும் கேட்டால் கோபமாகக் கன்னாபின்னாவெனத் திட்டி விடுவாராம். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் சொல்லி கிலி உண்டு பண்ணி இருக்கிறார். ‘பெண்களின் அந்தரங்கத்தை அறிந்துகொள்ள விரும்பும் ஆண்களை நான் வெறுக்கிறேன். சமயங்களில் மன அழுத்தத்தில் யாரையேனும் கை நீட்டி விடுவதும் உண்டு’ என்று சொல்லி இருக்கிறார். இனி மல்லிகாவைப் பத்தி பேசுவீங்க?

மைத்திரிய கௌடா: கன்னட சினிமாவின் இளம் வளர்ந்து வரும் நடிகை. சில வருடங்களுக்கு முன் பெங்களூருவின் பிஸியான சாலை ஒன்றில் வேகமாக காரில் தன் சகோதரி சுப்ரியா மற்றும் உறவுக்காரப் பெண்களுடன் சென்றிருக்கிறார். அவரை மடக்கிப்பிடித்த ஷிவக்குமார் என்ற போலீஸ் ஏட்டுவிடம் காரசாரமாய் சண்டை போட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த வண்டியில் இருந்த நான்கு பெண்களுமாய் சேர்ந்து அந்த போலீஸ்காரரை இறங்கி வந்து மொத்தி இருக்கிறார்கள். காயம்பட்ட ஷிவக்குமார், நடிகையின் சமரச முயற்சிக்கு கடைசிவரை ஒத்துழைக்கவில்லை. கோர்ட் படி ஏறி தற்போது தனக்கு சாதகமாகத் தீர்ப்பு வாங்கி உள்ளார். ஆம். மைத்திரிய கெளடாவுக்கு 3,000 ரூபாய் அபராதமும், மற்ற பெண்களுக்கு 2,000 ரூபாய் அபராதமும் விதித்திருப்பதோடு மைத்திரியாவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் விதித்திருக்கிறது. பெயில் வாங்கி வெளியில் வந்து மேல் முறையீடு செய்திருந்தாலும் நடிகைக்கு எல்லா நீதிமன்றத்திலும் தண்டனை வாங்கித் தராமல் ஓய மாட்டேன் என சூளுரைத்திருக்கிறார் ஷிவக்குமார். பாவம் மைத்து!

ரோஸ்லின் கான்: மாடலும் நடிகையுமான ரோஸ்லினுக்கு பின்புறத்தைக் காட்டிக்கொண்டு போஸ் கொடுப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல. நிறைய டி.வி விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ரோஸ்லின் தான் ராம் கோபால் வர்மாவின் சர்ச்சைக்குரிய சினிமாவான ‘சவீதா பாபி’ என்ற படத்தில் கில்மா ஆன்ட்டி ரோலில் நடித்துக் கலக்கிக்கொண்டிருக்கிறார். மார்பகப் புற்று நோய் விழிப்பு உணர்வுக்காகவும்,ஐ.பி.எல்-லுக்காகவும் அரைகுறை ஆடைகளில் ஆடி, மீடியா கவனத்தைக் கவர்ந்தவர் அண்மையில் பொது இடத்தில் வைத்து ஒருவரை அடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். பின்னழகைக் கிண்டல் பண்ணியதால் விழுந்த அடியாம் அது. ‘கேமராவுக்கு முன்னாடிதான் நான் உடலைக் காட்டுவேன். மற்றபடி என் உடலை யாரேனும் கேலி செய்தாலோ, ஆபாசமாக வர்ணித்தாலோ உதை விழும்’ என்று ஸ்டேட்மென்ட் விடுத்திருக்கிறார். ஆத்தீ!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick