ஆஃப் த ரெக்கார்டு!

மீபத்தில் இசை ஹீரோ, தான் நடித்த  ஸ்கூல் படத்தின் எந்த புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. படம் ஆரம்பித்தபோது பேசப்பட்ட சம்பளத்தை விட, மூன்று மடங்கு அதிக சம்பளம் ஹீரோ கேட்க, தயாரிப்புத் தரப்புக் கொடுக்க மறுத்ததால், படத்தை விளம்பரப்படுத்த ஒத்துழைப்புக் கொடுக்கவில்லையாம்!

தெலுங்கின் மெகா ஸ்டார் நடிக்கும் ஆயுதப் படத்தின் ரீமேக்கில் நாயகியாக நடிக்க நம்பர் நடிகையிடம் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும், நடிகை கண்டிஷன்களுக்கு ஒத்து வராததால், உயர நாயகியை புக் பண்ணச் சொல்லி விட்டாராம் மெகா நடிகர்!

இசை படத்தின் மீது இருந்த நம்பிக்கையால் அதன் ரிலீஸை எதிர்பார்த்து எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தாராம் மந்திர நடிகை. படம் முடங்கியே கிடப்பதால், முன்பு வந்த வாய்ப்புகளும் தற்போது இல்லையாம். இதனால் திருமணத்துக்கு ஓகே சொல்லி விட்டாராம் நடிகை!

தன் தயாரிப்பில் நடித்த இரண்டு இளம் நடிகர்களின் கடும் போட்டியைச் சமாளிக்க இன்னும் கடினமாக உழைக்க ஆரம்பித்து விட்டாராம் ஒல்லி நடிகர். இதனால் வருடத்திற்கு நான்கு படங்கள் நடிப்பது என்றும், அதில் இரண்டு இளம் இயக்குநர்களின் படங்கள் எனவும் முடிவெடுத்திருக்கிறாராம்.

சென்னை நடிகை சமீபத்தில் எம்.எல்.ஏ-வாக நடித்து வெளியான தெலுங்குப் படம் சூப்பர் ஹிட் ஆனதால், பல தெலுங்குப் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்த வண்ணம் இருக்கிறதாம். மேலும், தமிழில் பெரிய வாய்ப்புகளும் இல்லாததால் தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தும் முடிவில் இருக்கிறாராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்