ஊருக்குப் புதுசா?

நானும் மதுரக்காரன்தான்டானு ஊர்லேர்ந்து கண்கள்ல கனவுகள் மின்ன சென்னைக்கு வர்றவங்க இங்கே வந்து வாங்குற பல்புகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமைசாலினு சிக்கின அவங்களை சின்னாபின்னமாக்குறதே மத்தவங்களுக்கு வேலையாப் போச்சு.

அன் ரிசர்வ்டு சீட்டுல நெருக்கியடிச்சு கஷ்டப்பட்டு சென்னை வந்து இறங்கினதும் சீனியருக்கு (சீனியர்னா ஊர்ல ஒண்ணு மண்ணா பழகிட்டு இப்போ இங்கே குப்பை கொட்டுற, வயசுல மூத்த தடிப்பசங்க) போன் பண்ணினா, நீயே பஸ் புடிச்சு வந்துரு வழி சொல்றேம்பாங்க. முதல் கேள்வி. எங்கே இருக்க?

மதுரக்காரன் நம்மளைவிட்டா, இந்தத் தமிழை யாரு காப்பாத்துறதுனு, எக்மோரை ‘எழும்பூர்’னு சொல்ல... கண்ணதாசனா, பாரதிதாசனான்னு சீனியர் குழம்ப இப்படியாக சென்னைப் பிரவேசம் குழப்பத்துல ஆரம்பிக்கும்.

ஒருவழியா சீனியர் சொன்ன அடையாளத்தை வெச்சு இதுதான் பஸ் ஸ்டாப்புனு கண்டுபிடிச்சுப் போய் நின்னு பஸ் ஏறியதும், லெப்ட் சைட் இவ்வளவு இடம் ஃப்ரீயா இருக்கே... இங்கே எவனுக்குமே வெவரம் பத்தலடானு மைண்ட் வாய்ஸ் ஒலிக்க லெப்ட் சைட் உட்கார்ந்து ஆசுவாசப்படும்போது, பெண்ணியத்தின் மொத்த உருவமாய் உள்ள ஏதேனும் ஒரு பெண்மணியால் எழுப்பப்படுவோம். அப்புறம்தான் தெரியும் அத்தனையும் லேடீஸ் சீட் என. அநேகப்பேர் முதலில் வாங்கும் பல்பு இதுவாகத்தான் இருக்கும்.

பொதுவாக எக்மோரிலிருந்து இரண்டு பஸ் மாறிப்போக வேண்டியிருக்கும். முதல் பஸ்ஸிலிருந்து வெற்றிகரமாக இறங்கி முடித்து அடுத்த பஸ்ஸூக்குக் காத்திருக்கும்போது, அர்ஜூனன் புறாவோட கண்ணுக்கு எய்ம் வெச்ச மாதிரி போற வர்ற பஸ் நம்பரெல்லாம் பார்ப்போம். சீனியர் சொன்ன பஸ் நம்பர் வந்ததும் திடுதிடுவென ஏறி டிக்கெட் கேட்கும்போதுதான் தெரியும் ‘மாப்பிள்ளை இவர்தான், ஆனா அவர் போட்டுருக்கிற சட்டை என்னோட’ மாதிரி பஸ் நம்பர் சரிதான். ஆனா ஆப்போசிட் சைட் நின்னு ஏறணும்னு அட்வைஸ் வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்