போட்டோ பார்க்கலையோ போட்டோ!

ம் ஆட்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ‘ரகம்’ங்கிறதை வெச்சிருக்கிற புரொஃபைல் பிக்சரைப் பார்த்தே கண்டுபிடிச்சுடலாம். வழக்கமா புழக்கத்தில் இருக்கும் புரொஃபைல் பிக்சர் (டி.பி) வகைகள் இவைதான்...

அரையும் குறையுமாக போட்டோஷாப் தெரிஞ்ச அரைவேக்காடு யாராவது, சிங்கத்தின் மேல் சவாரி செய்ற மாதிரி புரொஃபைல் போட்டாவை எடிட் செய்து போட்டு நம்மை எரிச்சலாக்குவார்கள்.

முக்காலும் குறையுமாக போட்டோஷாப் தெரிஞ்ச குரூப்பினர், நடிகர்கள் உடம்பில் தன் தன் தலையைப் பொருத்தி டரியல் மோடில் டி.பி வைப்பார்கள்.

டம்மி போட்டோ எடிட்டிங் சாஃப்ட்வேரில், பூந்தொட்டிக்குள்ளேயோ, காபி கப் நடுவிலோ அவர்கள் மூஞ்சி தெரிவதுபோல் எடிட் செய்து கலவரம் செய்வார்கள்.

பெரும்பாலான ஃபேக் ஐ.டி-க்கள் குழந்தை தவழுற மாதிரியோ, பூ பூத்த மாதிரியோதான் டி.பி வைப்பார்கள். குழந்தை மனசுக்காரய்ங்களாம்.

சிலர் சட்டையைக் கழட்டி தனது சிக்ஸ்பேக்கை மட்டும் போட்டோ எடுத்து டி.பி வைத்திருப்பார்கள். ஜிம்முக்கு போறாய்ங்களாமாம்...

இன்னும் சில ஃபேக் ஐ.டிக்களை 18 வயசுக்கு மேல உள்ளவங்க மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் அளவிற்கு இருக்கும். கருமம்... கருமம்...

சில விஷக்கிருமிகள் கையில் சரக்குடனோ, சிகரெட்டுடனோ ‘குப்...’ என புகையை ஊதிய மாதிரியே போஸ் கொடுத்திருப்பார்கள். இவர்கள் ‘நாங்கெல்லாம் ராவான ரௌடி’ என நினைத்துக்கொண்டிருக்கும் அபூர்வ வகையினர்.

பெரும்பான்மையினர் இவங்கதான். டி.பியில் ஹீரோ, ஹீரோயின் போட்டோ வைத்திருப்பார்கள். இவிய்ங்க தான் இந்த சுதந்திர இந்தியாவின் சாதாரண குடிமகன்கள்.

அதே போல், தன் போட்டோவையே போடும் பலர் முகத்தில் கூலிங்கிளாஸோடு க்ளோஸ் அப்பில் எடுத்த செல்ஃபியை டி.பியாக வைத்திருப்பார்கள். முகத்தில் வேறு ரொமாண்டில் லுக் தாண்டவமாடும்.

‘எல்லாமே இந்த வளையாபதிக்கு டிஃபெரென்டா பண்னணும்’ என சிலர் காக்கா ராதாகிருஷ்ணன், பொன்னம்பலம் போன்றவர்களின் போட்டோவை டி.பியாக வைத்திருப்பார்கள்.

45 வயதிற்கு மேலான பல அங்கிள்கள்தான் 35 வயதில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை டி.பியாக வைத்திருப்பார்கள். யூத்துனா இப்படிதான் இருக்கும்.

யாருக்கோ சொந்தமான காஸ்ட்லி காரின் முன்னால் குத்தவைத்து உட்கார்ந்து கையில் இரட்டை இலையைக் காட்டி போட்டோ எடுத்துப் போட்டிருப்பார்கள். புதுசா ட்ரை பண்ணுங்க மக்களே...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick