சொன்னீங்களே, செஞ்சிங்களா?

சொன்னீங்களே... செஞ்சீங்களா? என்பது அன்றாட வாழ்க்கையில் அனைவரும் தம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. அது யாரா வேணும்னா இருக்கலாம், ஒரு சுகவாசியா இருக்கலாம். ஒரு சோம்பேறியா இருக்கலாம். ஏன் அந்த சோம்பேறி நீங்களாகூட இருக்கலாம்!

ஒவ்வொரு வருசமும் டிசம்பர் 31-ல, இனிமே தண்ணியடிக்க மாட்டேன். இது சத்தியம்னு சொல்லிட்டு சத்தியத்தையே மறந்துட்டீங்க‌.  சொன்னீங்களே, செஞ்சீங்களா?

ஃபேஸ்புக், ட்விட்டர்லாம் இனிமே போகக் கூடாது. அப்படியே போனாலும் அஞ்சு நிமிஷம்தான்னு சொல்லிட்டு அங்கேயே குடியிருக்கீங்க. சொன்னீங்களே... செஞ்சீங்களா?

எதையுமே தேடுறதுலேயே பாதி நேரம் போகுது. இனிமே பைக் சாவியை/டி.வி ரிமோட்டை ஒரே இடத்துல வைக்கணும்னு சொன்னீங்களே... செஞ்சீங்களா?

அருகம்புல் ஜூஸ்தான், ஆர்கானிக் ஃபுட்தான்னு பிராணி போல சாப்பிடுவேன்னு சொல்லிட்டு பிரியாணியா வெளுத்துக்கட்டுறீங்க.சொன்னீங்களே... செஞ்சீங்களா?

அடுத்த புத்தகக் கண்காட்சி வர்றதுக்குள்ளே வாங்கின புத்தகங்களையெல்லாம் படிச்சி முடிச்சிடணும்னு சொல்லிட்டு என்ன புக் வாங்கினோம்னே மறந்துட்டீங்களே. சொன்னீங்களே... செஞ்சீங்களா?

பக்கத்துல எங்கேயும் போகணும்னா, பைக்கை எடுக்கப் போறதில்ல... நடைதான்னு சொன்னீங்க. அது ‘நடக்கிற’ கதையாவே இல்லையே...சொன்னீங்களே... செஞ்சீங்களா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்