கூல் பேபி கூல்!

வாட்ஸ்-அப், ஹைக்னு இப்போதெல்லாம் காதலிகளோடு சாட் பண்றது அவ்வளவு ஈசியா இருந்தாலும் பொண்ணுங்களுக்கு முன் கோபமும் ஜாஸ்தி பாஸ். அசந்தா நம்ம லவ் அம்பேல் ஆகிடும். அதனால சண்டை போடாமல் லவ் பண்ண பாய்ஸுக்கு சில டிப்ஸ்...

“இன்னிக்கு ஏன் குட் மார்னிங் சொல்லலை. கண்ணு முழிச்சதும் எனக்குதான் மெசேஜ் பண்ணணும்னு சொல்லிருக்கேன்ல” என சிவந்த மூஞ்சி ஸ்மைலிகளோடு அன்றைய தினத்தைத் தொடங்குவார்கள். ‘ஜிம்முக்கு லேட்டாயிடுச்சு. அதாம்மா’ என அசட்டுக் காரணங்களையெல்லாம் சொல்லிவிடக் கூடாது. இப்போ சொல்றேன் பாருனு “தெளசண்ட் டைம்ஸ் குட் மார்னிங்” என பிட்டைப் போட வேண்டும். ஐடியா மொக்கையாக இருந்தாலும் பொண்ணுங்க மனசு தங்கம் பாஸ். சரிடா எருமை என கூலாகி விடுவார்கள்.

“ஃபேஸ்புக்ல உனக்கு கமென்ட் பண்ணுவாளே, அவகிட்ட இன்பாக்ஸ்ல பேசுறியா..?” என அடுத்த வெடியை வீசுவார்கள். உன்னை விட்டுட்டு யார்கிட்ட செல்லம் பேசுவேன் எனக் குழைய வேண்டும். என் மேல ப்ராமிஸ் பண்ணு என மறுபடியும் கேட்டால், அம்மணி ஆதாரத்தோடு வந்திருக்கிறார் என்று அர்த்தம். டபக்கென ஒப்புக்கொண்டு உன் மேல ப்ராமிஸ் பண்ண மாட்டேன் என சிம்பதி க்ரியேட் செய்தால் போதும். நீங்க எஸ்கேப்.

உங்கள் காதலி வாட்ஸ்-அப்பில் வடசட்டி போல வாயை வைத்துக்கொண்டு செல்ஃபி எடுத்து போட்டோ அனுப்பினாலும் “ஓய்... செம்மையா இருக்க” எனச் சொல்லி நான்கைந்து முத்த எமோஜிகளையும் தெறிக்கவிட வேண்டும். சைலன்டாக இருந்துவிட்டால் உங்கள் பாடு பரிதாபம்தான். பொய் நல்லது பாஸ்!

‘‘ஆன்லைன்ல இருந்துக்கிட்டே என்கிட்ட பேசாம யாருகிட்ட பேசிட்டுருக்கே’’ என ஹைபிட்ச்சில் உங்கள் காதலி எகிறினால், நீங்கள் பாந்தமாக “நீ ஆன்லைன்ல வருவேன்னுதான் காத்துட்டு இருந்தேன் டார்லிங்’ என நாஞ்சில் சம்பத் பாணியில் டயலாக் டெலிவரி செய்ய வேண்டும். வேறு ஏதேனும் பதில் சொன்னால் கேப்டனைப் போல் தூக்கியடித்து விடுவார்கள்.

கோபத்தில் உங்க லவ்வர் ‘ஐ ஹேட் யூ’ எனக் கத்தினாலும் அதுவும்கூட ‘ஐ லவ் யூ’ என உங்கள் காதில் விழுந்தது போல ‘லவ் யூ டு செல்லம்’ என டாவடிக்க வேண்டும். இதை அவர்கள் எதிர்பார்த்திராததால் வெட்கத்தில் கொஞ்சலாக ‘போடா பன்னி’ எனத் திட்டினால் மேட்டர் ஃபினிஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்