கண்டுபிடிங்களேன்!

ப்போ ‘24’ படம் வந்து சக்கைப்போடு போடுது. அந்தப் படத்தோட டைம் மெஷின்தான் ஹாட் டாபிக். இந்த டைம் மெஷின் மாதிரியே வேற என்னென்ன மெஷின்லாம் கண்டுபிடித்தால் நமக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்னு பார்க்கலாமா பாஸ்?

டேஸ்ட் சாப்பாடு மெஷின் - வீட்டுல ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட் இருக்கு. ஒருவருக்கு காரம் அதிகம் வேணும். இன்னொருவருக்கு காரம் கம்மியா வேணும். ஒருவருக்கு காபியில இனிப்பு அதிகம். இன்னொருவருக்கு கம்மி. ஒருவருக்கு குழம்புல எண்ணெய் மிதக்கணும். இன்னொருவருக்கு எண்ணெயே ஆகாது. இப்படி சிக்கல்களைச் சமாளிக்க ஒரு மெஷின் வந்துவிட்டால் சூப்பரா இருக்கும்ல!

ஷாப்பிங் மெஷின் - சேலை எடுக்கவோ, சோப்பு டப்பா எடுக்கவோ, ஷாப்பிங்னு கடைக்குக் கிளம்பிப்போனாலே வீட்டு அம்மணிகள் ஒருநாள் ஃபுல்லா வேஸ்ட் பண்ணிடறாங்க. அவங்களோட சேர்ந்து நாமளும் பொதி சுமக்க வேண்டியிருக்கு. அதனால ஷாப்பிங்கை சட்டுபுட்டுனு முடிக்க ‘ஷாப்பிங் மெஷின்’ கண்டுபிடிக்கலாம்!

ஜம்பிங் பஸ்
- ட்ராஃபிக்ல சிக்கிட்டு இருக்கிறப்போ அப்படியே நம்ம வண்டி மட்டும் வெட்டுக்கிளி மாதிரி ஜம்ப் பண்ணிப் போனால் நல்லாருக்குமேனு தோணும். அப்புறமென்ன, அதே மாதிரி பஸ் உருவாக்கிவிட வேண்டியதுதான். டிராஃபிக் பயமே இல்லை!

ஓட்டுப் போட மெஷின் - 100 சதவிகித வாக்குப்பதிவு வர்றதுக்காக இந்த வருஷம் ரொம்பவே மெனக்கெட்டுட்டாங்க. நாமளும் உதவலாம்ல. ஓட்டுப் போடாமல் இருக்கிறவங்களை அப்படியே அலேக்கா தூக்கிட்டு வாக்குச்சாவடிக்கு வரவைக்கிற மெஷின்தான் இது!

வாட்டர் டேங்க் ஃப்ளோ தடுக்கிற மெஷின் - வாட்டர் டேங்க்னாலே அது நிரம்பி வழியறதுதான் வாடிக்கையா நடக்குது. ஆக அப்படி வழியறதைத் தடுக்க ஒரு சென்சார் மெஷின், ‘டேய் தடியா, தண்ணி நிறைஞ்சிடுச்சு’னு வீட்டுக்காரங்களைத் திட்டுற மாதிரி செட் பண்ணிடணும். அப்புறம் கொட்டுமா என்ன?

சீரியல் ப்ரிடெக்டர் மெஷின் -ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையே வாரக்கடைசி சீரியல் முடிவு தெரிந்தால் சூப்பரா இருக்கும்ல. அதுக்குதான் இந்த மெஷின்!

ஜி.பி.எஸ். ட்ராஃபிக் மெஷின் - நிறையப் பேர் ஹெல்மெட்டை மடியில வெச்சுக்கிட்டு வண்டி ஓட்டுறப்பவும் சரி, டிரைவிங் லைசென்ஸ் இல்லாம ஓட்டுறப்பவும் சரி, எங்கே டிராஃபிக் போலீஸ் நிற்பாங்களோனு பதட்டத்தோடதான் போவாங்க! அந்தப் பதட்டத்தைத் தவிர்க்க, டிராஃபிக் போலீஸ் நிற்கிற இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்ல தனி மெஷின் இருந்தால் நல்லாருக்கும்ல பாஸ்!

ஷாக்ஸ் டிடெக்டர் - எதாவது ஆபீஸ் கான்ஃபரன்ஸ் நடந்தால் எவனாவது ஒருவன் துவைக்காத ஷாக்ஸோட மீட்டிங் அட்டெண்ட் பண்ணி எல்லோரையும் யோசிக்க வெச்சிடுவாய்ங்க. ஆக, யாரு துவைக்காத ஷாக்ஸோட உள்ளே வந்திருக்காங்களோ, அவங்களைக் கண்டுபிடிக்க ஷாக்ஸ் டிடெக்டர் மெஷின் கண்டிப்பா வேணும் பாஸ்!

அலாரம் ஜில்தண்ணி மெஷின் - சில பேர் அலாரம் வெச்சுட்டுதான் தூங்குவாங்க. ஆனால் எவ்ளோதான் அலாரம் அடிச்சாலும் எழுந்திரிக்கிறதே இல்லை. டம்மு டம்முனு குத்துற மாதிரி அலாரமெல்லாம்கூட வந்திடுச்சு. இனி அடுத்த கட்டமா அலாரத்தோட ஜில் தண்ணியை மூஞ்சியில ஊத்துற மாதிரி மெஷின்தான் சரிப்படும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்