தினுசு தினுசா ஸ்டேட்டஸ்!

ஃபேஸ்புக்கை ஓப்பன் பண்ணினாலே எனக்கு மட்டும்தான் இப்படி மொக்கை ஸ்டேட்டஸ்கள்  கண்ணுக்குத் தெரியுதா..? நான் பார்த்த சில வழக்கமான விநோத ஸ்டேட்டஸ் வகைகள் இவை... 

கலீஜ் ஸ்டேட்டஸ்கள்: கெட்ட வார்த்தையோட தான் எதையும் எழுது வார்கள். ‘****தா என் ஆசான் போல வருமா? என்னடா எழுதுறீங்க நீங்கள்லாம்? த்தூ மூடிட்டுப் படுங்கடா!’ - பெரும்பாலும் சரக்கடிச்ச பிறகு தினம் ராத்திரி 11 மணிக்குப்பிறகுதான் ஃபேஸ்புக் ஓப்பன் பண்ணுவாராம் அவர்.

புலம்பல்ஸ் ஆஃப் இந்தியா: இவ்வகை ஸ்டேட்டஸ்கள் பெண்களால் அதிகம் பகிரப்படுகின்றன என்று கொள்க. காதல் தோல்விக் கவிதைகளில் தெறிக்கவிடுவார்கள். உதாரணமாக ‘நீ இல்லாத வாழ்க்கை அனலில் தகிக்கும் தக்கை!’ என எதையாவது ஸ்டேட்டஸாக போடுவார்கள். ஃபுல் கருப்பு புரொஃபைல் படமோ அல்லது pain என்ற ஆங்கில வார்த்தையைப் பெரிதாக கவர் போட்டோவாக வைத்திருப்பார்கள். பயபுள்ள டைரியில எழுத வேண்டியதெல்லாம் இங்கன எழுதுதேனு நினைக்கும்போதே நம்மாளுங்க ரெண்டு பேர் ‘தோழி கலங்காதிரு மனமே உனக்காய் இருப்பேன் அனுதினமே!’ என நூல் கமென்ட் போட்ருப்பானுங்க.

சோக வயலின் சோமநாதன்கள்: எப்போதும் நெகட்டிவ் செய்திகளை மட்டுமே ஷேர் செய்வார்கள். மலைப்பாம்பு மனிதனை விழுங்கும் காட்சி, விழிப்பு உணர்வு செய்கிறேன் என்ற பெயரில் சாலை விபத்தின் கொடூரமான காட்சிகள், ‘உங்கள் மரண தேதி என்ன?’ என்ற ஆப்ஸ், ‘இன்பம் வரும் வேளையில் துன்பமும் பரிசளிக்கப்படுகிறது’ போன்ற மொக்கை தத்துவங்கள் என சிதற விடுவார்கள். மியூஸியத்தில் வைக்க வேண்டிய ஆட்கள். கவனமாக ஹேண்டில் செய்யணும்!

தல- தளபதி டேட்டா பாய்ஸ்: ‘கத்தி’ 100 கோடிடா, ‘மங்காத்தா’ 120 கோடிடா, ‘துப்பாக்கி’ 130 கோடிடா, ‘வீரம்’டா ‘ஜில்லா’டானு விஜய், அஜித்துக்கே தெரியாத அரிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்களை ஸ்டேட்டஸ்களில் தெறிக்கவிடுவதை முழு நேர வழக்கமாக வைத்திருப்பவர்கள். அப்புறம் ஏன் இன்கம்டாக்ஸ் ரெய்டு வர மாட்டாங்க பாஸ்? எதுவும் கிடைக்கலையா? தங்கள் தலைவனின் எளிய குணத்தை கியூவில் நின்று ஓட்டுப்போடுவதையோ தையல் மெஷின் கொடுப்பதையோ ஃபீல் பண்ணி ஸ்டேட்டஸ் தட்டுவார்கள். எவ்வளவு நாளைக்கு பாஸ்?

புரொஃபைல் வெறியர்கள்: ஒருநாளைக்கு நாலு புரொஃபைல் படத்தையாவது ஆப்ஸில் பட்டி டிங்கரிங் பண்ணி போஸ்ட்டாகப் போடுவார்கள். கண்டிப்பாக 60 ரூபாய் கண்ணாடி அணிந்திருப்பார்கள். ‘யோ யோ’ என ஜஸ்டின் பெய்பரை ட்ரை பண்ணி பிரேம்ஜி அமரன் எஃபெக்ட் கொடுப்பார்கள். ஒரு ரகசியம் சொல்லவா...? அந்த ஆளு நான்தான் பாஸ்.

எனன் கொடுமை சரண் இது?

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick