இவங்கதான் ஆபீஸ்!

லுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு, அங்கே வேலை பார்க்கும் சுவாரஸ்யமான கேரக்டர்களை மறக்கவே முடியாது. அப்படி மனதில் பதியும் கேரக்டர்கள் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு அலுவலகங்களில் இருந்தாலும் கேரக்டர் நாம் பார்த்ததாகத்தான் இருக்கும். அவங்களோட வகையைப் பார்த்திடலாமா!

‘கிளிப்பிள்ளை’ கனகராஜ் - சொன்ன வேலையை மட்டும்தான் செய்வாங்க. எக்ஸ்ட்ராவா ஒரு வேலை கொடுத்தால்கூட செய்ய மாட்டாங்க. அதாவது சுயமா சிந்தித்து செயல்படத் தெரியாது!

‘லேட்’ லோகநாதன் - எப்போ பார்த்தாலும் ஆபீஸுக்கு லேட்டா வந்துட்டு எக்ஸ்கியூஸ் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு மட்டும் எப்படித்தான் அத்தனைக் காரணங்கள் கிடைக்குமோ!

‘வத்தி’ வரதராஜன் - யாரைப்பற்றியாவது யார்கிட்டேயாவது வத்தி வெச்சுக்கிட்டே இருப்பாங்க. அப்படி வத்தி வைக்கிறதை வைத்தே ஆபீஸ் முழுக்கப் பழக்கம் வெச்சிருப்பாங்க. இந்த விஷயத்துல மட்டும் ரொம்ப அப்டேட்டிவ்வா இருப்பாங்க!

‘தொணதொண’ தொண்டைமான் - வேலை நேரத்துல எப்போ பார்த்தாலும் தொணதொணன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க. வாயில் ப்ளாஸ்டர் ஒட்டினால், அவ்ளோதான். வேலையவே விட்டுட்டுப் போனாலும் போய்டுவாங்க!

‘கர்புர்’ கந்தசாமி - பெரும்பாலும் இவங்க வயசான ஆளாத்தான் இருப்பாங்க. எல்லோர் மேலேயும் எரிஞ்சு விழுந்துக்கிட்டேதான் இருப்பாங்க!

‘ஷிப்டிங்’ சிங்காரம் - இவங்க ஒரு வேலையில உருப்படியா இருக்க மாட்டாங்க. ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு வேலைக்கு மாறிக்கிட்டே இருப்பாங்க. வேலையில சேர்றப்போ அந்த கம்பெனியைப் புகழ்ந்து தள்ளுவாங்க. ஒரே மாசத்துல வெறுத்துட்டு, ஏகப்பட்ட புகார் பட்டியலை வாசிச்சுட்டு அடுத்த வேலை தேடுவாங்க!

‘மங்குணி’ மாதவன் - இவங்ககிட்ட எந்த வேலையை கொடுத்தாலும் உருப்படாது. எப்படி விளக்கிச் சொல்லிக் கொடுத்தாலும் சொதப்பி வைப்பாங்க!

‘தூங்குமூஞ்சி’ தூங்காவனம் - இவங்க எப்படினு சொல்லவே தேவையில்லை. எந்த நேரம் பார்த்தாலும் தூங்கி விழுந்துக்கிட்டே இருப்பாங்க. அப்படி நைட்டெல்லாம் கண் விழிச்சு வீட்டுல என்னதான் வேலை பார்ப்பாங்களோ? அவங்களுக்கே வெளிச்சம்!

‘சொம்பு’ சண்முகம் - அந்த ஆபீஸ்ல யாருக்கு சொம்படிச்சால் வேலையாகும், இன்க்ரிமென்ட் கிடைக்கும்னு பார்த்து, அவருக்கு மட்டும் சொம்படிப்பாய்ங்க. வேலையே செய்யாவிட்டாலும் சம்பளம், இன்க்ரிமென்ட் வாங்கி எல்லோரையும் வயிறெரிய விடுவாய்ங்க!

‘பான்பராக்’ பரமசிவம் - பான்பராக், பீடானு என்னத்தையாவது குதப்பிக்கிட்டேதான் வேலை பார்ப்பாங்க. அந்த ஏரியாவையே பான்பராக் வாடையால கதறவிடுவாங்க!

‘ஸ்மோக்’ சதீஷ் - இவங்க செயின் ஸ்மோக்கர் மாதிரி இருப்பாங்க. கொஞ்சம் டென்ஷன் ஆசாமிகள்தான். பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை தெருமுக்குல இருக்கிற பெட்டிக்கடைக்குப் போய் தம்மடிச்சுட்டு அதுக்கப்புறம்தான் வேலை பார்ப்பாங்க!

‘சவுண்டு’ சரோஜா - இவங்களுக்கு ஏதாவது பாட்டு கேட்டுக்கிட்டேதான் வேலை பார்க்கவரும். அதுவும் ஹெட்போனில் கேட்காமல், ஸ்பீக்கரில் போட்டு அலறவிடுவதுதான் இவங்க ஸ்பெஷல். புதுசா எந்தப் படத்தோட பாட்டு ரிலீஸ் ஆனாலும் முதல் வேலையா டவுன்லோட் பண்ணிடுவாங்க!

‘டெகரேஷன்’ டக்ளஸ் - இவங்க பண்ற வொர்க் அழகா இருக்குதோ இல்லையோ, இவங்களோட வொர்க் ப்ளேஸ் ரொம்ப அழகா, கலர்ஃபுல் போட்டோஸ், டெகரேசன்லாம் செய்து கலக்கலா வெச்சிருப்பாங்க!

‘ஃபேமிலி’ பேச்சியப்பன் - எப்போ பார்த்தாலும் பொண்டாட்டிப் பிரச்னை, மாமனார் பிரச்னைனு புலம்பிக்கிட்டே இருப்பாங்க. அவங்களோட வீட்டுல தினமும் ஏகப்பட்ட வெட்டுக்குத்து நடக்கிற மாதிரியே டெர்ரர் கிளப்புவாங்க!

‘ப்ரவுஸிங்’ பீட்டர் - வேலை செய்றதை விட்டுட்டு எந்த நேரமும் நெட்ல ப்ரவுஸ் பண்றதுதான் இவங்களுக்கு வேலையே. ஆன்லைன் பர்ச்சேஸ் பண்றதைத் தனி வேலையா வெச்சிருப்பாங்க!

‘பந்தா’ பாண்டி - புதுசா ஒரு செல்போனோ, புதுசா ஒரு ஐபேடோ வந்துவிட்டால் போதும். ஆபீஸ்லேயே முதல் ஆளா அதை வாங்கிட்டு வந்து, ‘மச்சி இதில் இந்த பிக்சர் இருக்குடா! அந்த பிக்சர் இருக்குடா’னு ஒரே சீன்தான்!

‘கேம்ஸ்’ கைலாஷ் - எப்போ பார்த்தாலும் செல்போன் கேம்ஸும் லெவலுமா திரிவான். ஒவ்வொரு லெவல் தாண்டினதும் என்னவோ பெருஞ்சாதனை பண்ணின மாதிரிப் பீத்திக்கிட்டுத் திரிவான். எல்லா செல்போன் கேம்ஸும் அத்துபடி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்