அச்சம் மிச்சம்!

சின்ன வயசுல எது எதுக்கெல்லாம் பயந்திருக்கேன் தெரியுமா மக்களே?

மழை பெய்யும்போது இடி இடித்தால் தலைச்சன் பிள்ளையான என் தலையில் விழுந்து கருகிடுவேனோனு பயம்!

மளிகைக்கடையில் போய் நின்றதும் அம்மா சொல்லிவிட்ட லிஸ்ட்டில் பாதி மறந்து போயிருக்கும்.  அதை வாங்காமலே திரும்பும்போது அடி விழுமோ என பயம் வரும்!

‘ஈவில் டெட’ படத்துல வர்ற பேய்ங்க எல்லாமே வீட்டுக் கொல்லைப்புறத்துல உலாவுதுனு ரொம்ப நாளா நம்பினேன்!

இருட்டுக்குள் பாத்ரூம் போகும்போது பாம்பு வந்து கடிக்குமோனு பயமோ பயமோனு பயந்திருக்கேன்!

பொருட்காட்சியின் ஜெயன்ட் வீலில் மேலே போகும்போது கீழே விழுந்திடுவோமோனு செமையா பயந்திருக்கேன்! 

கணக்கு டீச்சர் வாய்ப்பாடு ஒப்பிக்கச் சொல்றப்போ  8, 9-ம் வாய்ப்பாட்டை க்ராஸ் பண்றப்போ செமையா பயந்திருக்கேன்!

கோ எஜுகேஷன் க்ளாஸ்ல ரெண்டு பொண்ணுகளுக்கு நடுவுல உட்காரச் சொன்னப்போ, தினமும் பயமா இருக்கும்!

‘கட்ட’ நாகேந்திரனை விட்டு கொட்டச் சொல்லும் ஜெயபால் வாத்தியார் என்றாலே பயந்து வரும்!

‘பேரன்ட்ஸை வரச்சொல்லு!’ எனச் சொன்ன அந்த நிமிடத்திலிருந்து ஹெச்.எம் ரூமுக்கு வெளியே அப்பாவோடு நிற்கும் வரை இதயம் டிங் டாங் என மாத கோயில் மணி போல அடிக்க ஆரம்பிக்குமே!

வாடகை சைக்கிள் எடுத்து, குரங்கு பெடல் போட்டு சுத்திட்டு கரெக்ட் நேரத்துக்கு வந்திடணுமேனு  ஒவ்வொரு வாட்டியும் பயந்துட்டே ஓட்டினது ஞாபகத்துல இருக்கே!

கட்டம் போட்ட சிவப்பு போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்தால் காரணமே இல்லாமல் பயம் வரும்!

பேனாவில் மை தீர்ந்திடுமோ எனப் பரீட்சை எழுத ஆரம்பித்த நொடி பயம் வரும்!

ரேங்க் கார்டில் இந்த வாட்டியும் அப்பாவின் கையெழுத்தை நாமளே போட வேண்டி இருக்குமோ என டெஸ்ட் முடிஞ்சதும் பயம் வரும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்