அங்கேயும் க்ளிஷே ஹை!

ஊன்னா ‘பாலிவுட்தான் சார் பெஸ்ட். தமிழ்ப் படங்கள்லாம் நான் பார்க்குறது இல்லைனு’னு பந்தா பண்ற ஆளா நீங்க? உங்களைப் பழி வாங்கத்தான் இந்தக் கட்டுரை!

பாட்டுன்னதும் கலர் கலரா பவுடரைக் காத்துல பறக்கவிட்டு கையில தோல் கருவிகளைக் கொடுத்து உருட்டி எடுப்பாங்க. காது ஜவ்வுக் கிழியக்கிழிய தாரை தப்பட்டைகள் கிழிஞ்சாதான் அது இந்திப்பாட்டு. #எத்தனை அமிதாப் பச்சன் படத்துல பார்த்திருப்போம்!

இப்போ பாப்புலரா இருக்கிற பல ஹீரோக்கள் ஆரம்பத்துல காமெடிங்கிற பேர்ல குரங்குச் சேட்டைதான் பண்ணுவாங்க. ஷாரூக் கான், அக்‌ஷய்லாம் அதுல உச்சம். #மூஞ்சி சுளுக்கிக்கிட்டா எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கிட்டேன்!

ஹீரோக்கள்ல அதிகம் 32 பற்களும் தெரியற மாதிரி எல்லா சீன்லேயும் வருவார் நம்ம கோவிந்தா. ரஜினி ஸ்டைலை அப்படியே காப்பி அடித்து அட்ராசிட்டி பண்ணுவார். டான்ஸ்ல அவர் பயன்படுத்துற ஸ்டைலுக்கு கோவிந்தா ஸ்டைல்னே பெயர். பார்க்க காமெடியா இருக்கும். ‘ஹம்’ படத்துல அப்படியே நம்ம சூப்பர் ஸ்டாரோட சேர்ந்துக்கிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டே ஒரு ஃபைட் பண்ணுவார் பாருங்க. #சிரிப்புக்கு செம கியாரன்டி! 

ஸ்டோன் ஃபேஸ்னு சொல்வாங்க. அது மிஸ்டர் பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் அமீர்கானுக்கும் அப்படியே ‘தூம்-3’ பார்க்கிறப்போ பொருந்தும். வில்லத்தனம் காட்டுறேன்னு ஒரே ரியாக்‌ஷனோட படம் பூரா வருவார்! சஞ்சய் தத்லாம் ரொமான்ஸ் காட்சிகள்லகூட கடப்பாறையை முழுங்கின மாதிரியே திரிவார். ஊர்மிளா மாதிரி அழகான ஃபிகர்கூட ஆடுறப்பவும் அதே ரியாக்‌ஷன்ஸ்தான்!  #அவருக்கு என்ன பிரச்னையோ?

அனில் கபூர் கழுத்துக்குக் கீழே... தப்பா நினைக்காதீங்க பாஸ், அப்படியே சத்யராஜ்தான். சட்டையைக் கழட்டிட்டு ஃபைட் பண்ணுற காட்சியில ஆளு பார்க்க கரடிக்குட்டியாட்டமே இருப்பார். ரெண்டு பட்டனை எடுத்து விட்டுட்டு நெஞ்சு பூரா முடி தெரியற மாதிரி அவர் வர்றதெல்லாம் செக்ஸ் அப்பீல்னு கிளப்பிவிட்டது யார்னுதான் தெரியலை. இந்த லிஸ்ட்ல நம்ம ‘ஆரண்ய காண்டம்’ படத்து வில்லன் ஜாக்கி ஷெராஃப்பும் இருக்கார். #‘ரங்கீலா’ல அந்த கடற்கரை ஜட்டி பாட்டு ஞாபகத்துல வந்து போகுதா இல்லையா?

வில்லன் நடிகர்கள்ல ஷக்தி கபூர் ரொம்ப மோசம். கிட்டத்தட்ட செமி நியூட்லதான் வருவார். பொண்ணுங்ககூட நீச்சல் குளத்துல குளிச்சுட்டே இருப்பார். இவர் ஜட்டியோட நடிச்ச படம் ஹிட்டாகுதுனு இருக்கிற எல்லாப் படங்கள்லேயும் இவர் சட்டையையும் பேன்ட்டையும் கழட்டுவாங்கனா பார்த்துக்கங்க. நம்ம ஊர்ல ராஜீவ்னு ஒரு நடிகர் இந்த ஸ்டைலை கொஞ்சநாள் ட்ரை பண்ணிப் பார்த்து விட்டுட்டார்.#இதெல்லாம் ஹீரோயிஸம் இல்லை. வில்லத்தனம்!

சீரியல் கில்லர் மாதிரி சீரியல் கிஸ்ஸர்னா நம்ம எம்ரான் ஹாஸ்மிதான் பாஸ். நடிச்ச  30 படங்கள்ல 25 படங்கள்ல லிப்-லாக் கிஸ் சீன்ஸ் இருக்கும். இவர் படம்னாலே கிஸ் இருக்கணும்னு சீன் பிடிக்கிறாங்களா என்னனுதான் தெரியலை. படம் சுமாரா இருந்தாலும் கிஸ்ஸுக்காகவே இவருக்கு பெண் ரசிகைகள் கூட்டம் இருக்கிறதா சொல்றாங்க. #இதெல்லாம் பெருமையா?

கரீனா கபூர் படங்கள் எப்பவும் கத்தி மேல நடக்கிற மாதிரிதான் பாஸ். கொஞ்சம் பிசகினாலும் இந்த சயிஃப் அலிகான் மனைவிக்கு முகம் கொடூரமா ஸ்க்ரீன்ல தெரிய ஆரம்பிச்சிடும். ஆமா, இயல்பா மேக்-அப் கம்மியா நடிச்ச படங்கள்ல அழகா தெரியறவங்க கொஞ்சம் மேக்-அப் ஜாஸ்தியா போட்ட படங்கள்ல பேய் மாதிரி தெரிவாங்க. நான் சொல்லலைப்பா. அவங்களோட 35 வயசு சொல்லுது. அழுற சீன்ல ரொம்ப பேய்த்தனமா இருக்காங்கனு அவர் கணவர் சயிஃப் அலிகானே ஸ்டேட்மென்ட் விட்டுக் கலாய்க்கிறார்னா பார்த்துக்கங்க. #பாவம் அவராலே முடியலை!

சாக்லேட் பாய் ஷாஹித் கபூர் பண்ணுற ஆக்‌ஷன் காட்சிகள்லாம் பார்க்கிறபோது நம்ம பரத் ‘பழனி’ படத்துல பண்ண ஆக்‌ஷன் காட்சிகளை ஞாபகப்படுத்துது. பால் வடியற முகத்துக்கு பல படங்கள்ல அவருக்கு ஆன்ட்டியாட்டம் இருக்கிற பொண்ணுங்கதான் ஜோடி. ‘ஆர்...ராஜ்குமார்’ படத்துல ‘சாரீ கே ஃபால் ஸா’ பாட்டுக்கு சோனாக்‌ஷிகூட ஆடுறப்போ ரொம்பப் பாவமா இருக்கும்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick