கதை விடுறாங்க!

‘வங்கிக் கடனை அடைக்காமல் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற அந்தத் தொழிலதிபருக்கு ஒரு போன் வந்தது.  எதிர்முனையில்....’

- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

பாலா வாணி: ‘சார் உங்க கடனைத் தள்ளுபடி பண்ணிட்டாங்க. உடனே அந்த மரங்கொத்தி விமானத்தைப் பிடிச்சு ஊருக்கு வாங்க’ என்றது.

அகஸ்டின் செல்வா: ‘3,000 ரூபாய் மதிப்புள்ள அழகிய தனலட்சுமி எந்திரம், குட்டி சிவலிங்கம், அதோடு வெளிநாடு சென்றுவர அதிர்ஷ்ட கூப்பன் இவையெல்லாம் வெறும் 990 ரூபாய்க்கு’ என ஒரு பெண் குரல் கேட்டது.

மோகன் லட்சுமி: ‘ஹலோ சார் நாங்க மாரியம்மன் இந்தியன் பேங்கில் இருந்து பேசுறோம். உங்களுக்கு ஏதாவது லோன் வேணுமா?’ என்றது.

காதலால் காயப்பட்டவன்: ‘நம்பி வாங்க சந்தோஷமாப் போங்க’ அப்படினு ஒரு நீதிபதி பேசினார்.

அமலன் அப்ரோஸ்: ‘யோவ், எங்கேயா போய்த் தொலைஞ்சே? இப்பெல்லாம் உன்னோட சரக்கு கூலிங்காவே கிடைக்க மாட்டேங்குது’ என்றது.

அகஸ்டின் செல்வா: எதிர்முனையி்ல் பேசியது விராட் கோலி. ‘யோவ் நீ வரலைனாலும் பரவாயில்லை. சம்பளப் பாக்கியை மட்டுமாவது குடு. பேட் வாங்கக்கூட விளம்பரத்துல நடிக்க வேண்டியதா இருக்குய்யா’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்