வசூல்ராஜா ஆகுங்க!

`கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’னு கேள்விப்பட்டிருக்கீங்களா பாஸ்? இப்போ இதெல்லாம் அப்படியே உல்டா. கடன் கொடுத்தவன்தான் நாயா பேயா அலையணும். சரி... கடன் வாங்கினவன் ஆயிரம் டகால்டி வேலை காட்டி எஸ்கேப் ஆகிற மாதிரி கடன் வாங்கினவனை கப்புனு பிடிச்சு அமுக்க ஐடியாஸ் தர்றோம். வொர்க் அவுட் ஆகுதான்னு பாருங்க.

ஒருவர் கடன் வாங்குவதற்கு முன்னாடி பத்து வட்டி ஆனாலும் பரவாயில்லைனு நம்ம ஆசையைத் தூண்டி இருப்பாரே...அந்த மாதிரி ஆளிடம் கடனைத் திருப்பி வாங்கணும்னா மொதல்ல அவர் ஆசையைத் தூண்டுங்க... வாங்கின கடனை வட்டியோட திருப்பிக் கொடுத்தவங்களுக்கு அவர் கட்டின வட்டிக்கு இணையா  தங்கச் சங்கிலி கொடுத்து செஞ்ச பாவத்துக்குப் பிராயச்சித்தம் பண்ணப்போறேன்னு சொல்லிப் பாருங்களேன். டக்குனு வந்து நிற்பார்.

உங்களைப் பாத்தும் பாக்காத மாதிரி முக்காடு போட்டுட்டு எஸ் ஆகுறாரா பார்ட்டி? நோ டென்ஷன். பின் பக்கமா போய்... ‘தம்பி, தர்பூசணி சர்பத்து வெயிலுக்கு  நல்லது’னு சொல்லிட்டு உங்க கைக்காசுல ஒரு சர்பத்தை வாங்கிக் கொடுத்துட்டு வந்துடுங்க. ஈரம் உள்ளவரா இருந்தா, எல்லாம் சரியாகிடும். அப்படியும் முக்காடு கன்டினியூ ஆச்சுனா, அந்த  அவர் துண்டை வாங்கி நீங்க முக்காடு போட்டுக்கலாம் சிம்பிள்.

போன் பண்ணா உங்க நம்பரைப் பாத்துட்டு எடுக்கவே மாட்டேங்கிறாரா? வேற நம்பர்ல இருந்து ட்ரை பண்ணினாலும் அன் நோன் நம்பர்னு எடுத்திருக்க மாட்டாரே... கப்புனு வாட்ஸ் அப்ல மெசேஜ் பண்ணுங்க. பயபுள்ள அதையும் பிளாக் பண்ணி வெச்சிருக்கா? ஃபீல் பண்ணப்படாது. வாட்ஸ் அப் குரூப்ல வந்து  ‘கார் வாங்கினதெல்லாம் இருக்கட்டும்... ட்ரீட் எப்போ தம்பி’னு டீசன்ட்டா கேட்டுட்டுப் போனாப் போச்சு.  பிளாக்கை ரிமூவ் பண்ணிட்டு பெர்சனல் சாட்டிங்ல வருவார்ல.

போன் பண்ணா எடுக்கவே மாட்டார். ஆனா ஃபேஸ்புக்ல கண்ட மேனிக்கு லைக்கும் போஸ்ட்டுமா தெறிக்கவிடுவாங்க. சீன் போடுறாங்களாம். அப்படி யார் போஸ்ட்டுக்காவது லைக் போட்ட நேரமா பார்த்து முதலில் இன்பாக்ஸ்ல புடிங்க. நோ ரிப்ளைனா, ச்சும்மா கமென்ட்ல ‘ஹவ் ஆர் யூ’னு கேட்டு டேக் பண்ணிடுங்க சிம்பிள்.

கடனை வாங்கணும்னு முடிவுபண்ணிட்டா, வயலன்ஸ் ரொம்பத் தப்பு. குளோஸா இருந்த சமயத்துல எடுத்த செல்ஃபீஸ் இருந்தா, ஃபீலிங் ஸ்டேட்ட்ஸ் போட்டுக் கடன்காரரின் புகழைப் பாடினால், ’இவ்ளோ நல்லவனையா?’ என ஏங்கித் தவித்து திருப்பித் தரக்கூடும்.

அப்பப்போ அவருக்குப் பிடித்த பாடலை ஃபேஸ்புக்ல டெடிகேட் பண்ணுங்க. ஆன்லைனுக்கு வராத பார்ட்டியா அப்போ அவனுக்கு இந்த ’பிஸ்மில்லாபாத், பிரியாணி’னு ஏதாவது பிடிக்குமே, அதையெல்லாம் பார்சல் கட்டிக்கொண்டு வீட்டுக்குப் போய் கொடுங்க. மசிஞ்சாலும் மசியும்.

என்னது? உங்க தலை தெரியறதைப் பாத்துட்டுக் கதவுக்குப் பின்னாடி ஒளிஞ்சிக்கிறாரா... உங்க பலத்தை இனிமேதான் நீங்க பயன்படுத்தணும். உங்க முகத்துல பயத்தை முழுசா தூக்கிப் போடுங்க.அவரைத் தேடிப் பிடிச்சு அவர் வாழ்நாள்ல மறக்கவே முடியாத அளவுக்கு அவருக்குக் கிச்சுகிச்சு மூட்டிட்டு வயிறு வலிக்க சிரிக்க வெச்சுட்டு வந்துடுங்க. இன்னொரு முறை உங்க இம்சை தாங்க முடியாம திருப்பிக் கொடுத்தாலும் கொடுத்திடலாம். கூல்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்