சினிமா விடுகதை!

த்து வருடங்களுக்கு முன் இளசுகளின் தூக்கத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கெடுத்த ஸ்லிம் பியூட்டி சிம்ரன் நடித்த படங்கள்தான் இந்த வார விடுகதைகளுக்கான விடைகள் பாஸ்...

1. ஆரம்பமே ஒன்ஸ்மோர் கேட்க வெச்ச படம். மூன்றெழுத்து நடிகரோடு திலகத்தையும் அபிநய சரஸ்வதியையும் ஒண்ணாப் பார்த்த படம். தேவா இசையில் ஊர்மிளாவையும், ஊட்டிமலையும் கேட்டோமே...சொல்ல முடியுமா மக்களே?

2. ராமாயண டைட்டில் படத்தில் இன்னொரு ஹீரோயின் அறிமுகமானாங்க. இனிஷியல் இயக்குநரின் ஹிட் சினிமாவுல டபுள் ரோல் நம்ம தல. என்ன படம் பாஸ்?

3. பேச்சுலர் பாயாக லவ் கிங் நடிச்ச சினிமா. இரண்டெழுத்து இயக்குநரின் காமெடி போல வருமா ஈஸியா? கடோத்கஜனோடு ஹார்பிக் நடிகரும் நடிச்ச படம்னு சொன்னா எல்லோருக்குமே தெரியுமே ஈஸியா!

4.  மண்ணைப்பத்தியும் ஒரு பொண்ணைப் பத்தியும் பேசின படத்துல அம்மாவா கலக்கினாங்களே சிம்மு. என்ன படம்னு டெல் மீ பாஸ்?

5. தளபதி கேரியரில் ‘ஜம்ப்’ தந்த சினிமா. ‘கண்ணில்லா சித்திரமே... குட்டிக்கான பத்திரமே’னு ருக்கு காத்திருந்த கதை. பாட்டும் படமும் ஹிட்டடிக்க மேடமும் முக்கிய காரணம். என்ன படம் அது?

6. ஃபாரீன்ல இருக்கிற அக்ரிமென்ட் கல்யாணத்தை இதில் பார்த்தோம். மேடம் கலக்கிய இந்தப் படத்துல அவங்க பேரு ப்ரியா. என்ன படம்னு சொல்லுங்க பார்ப்போம்?

7. இயக்கியவரோடு ஜோடி போட்ட படத்துக்கு இசைப்புயலே இசை! இந்தப் படத்து பாடல் ஒன்றை ரிங் டோனாக அ.தி.மு.க. ஆட்கள் பல பேர் இப்பவும் வெச்சிருக்காங்க. என்ன படம்னு ‘புதுசா’ யோசிச்சு சொல்லுங்க பார்ப்போம்!

8. அஞ்சு பேரு நடிச்ச படத்துல ஹீரோ பேரு ராம் சி.எம். ‘சின்னக் கல்லு பெத்த லாபம்’னு சொன்ன சினிமாவுல முன்னாடியும் பின்னாடியும் காமெடி மட்டுமே ஒளிஞ்சிக் கிடக்கு. என்ன படம் இந்தப் படம்?

விடைகள்:

1. ஒன்ஸ் மோர், 2. வாலி, 3. பம்மல் கே சம்பந்தம், 4. கன்னத்தில் முத்தமிட்டால், 5. துள்ளாத மனமும் துள்ளும், 6. பிரியமானவளே, 7. நியூ, 8. பஞ்சதந்திரம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்