அந்தக் காலத்திலே...

திகாலத்தில் இருந்த சில வினோதமான ‘ஸ்பை’ கேமராக்கள் இவை...

ரெக்டாஃப்ளெக்ஸ் ரோட்டார் கேமரா:

மூன்று லென்ஸ்கள் கொண்ட இத்தாலிய கண்டுபிடிப்பு. 1952-ல் இந்த கேமராவை வைத்திருந்தால் அவர்கள் படா பிரபலமாகத்தான் இருப்பார்கள். ஒற்றைக்கையில் பிஸ்டலைப்போல வைத்துக்கொண்டு சும்மா சுற்றிச் சுற்றிப் படம் பிடிக்க முடியும் என்பது இதன் ஸ்பெஷாலிட்டி!

பிரெஞ்சு ரிவால்வர் கேமரா:

1882-ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கேமராவைக் கண்டு ஐரோப்பாவே நடுங்கியது. படம் எடுக்கிறானுங்களா இல்லை நம்மளை நிஜமாவே துப்பாக்கித்தோட்டாவால் சுடப்போறானுகளா என்ற குழப்பத்தில் இந்த கேமரா கண்டுபிடிப்பை ஃப்ளாப் ஆக்கினார்கள் ஐரோப்பியர்கள்!

டெமோன் டிடெக்டிவ் கேமரா:

1880-ல் லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற கேமரா கம்பெனியான டெமோனின் முதல் ரகசிய கேமரா இதுதான். சட்டை காலரில் அல்லது சட்டையின் தோள்பட்டைப் பகுதியில் பட்டன் போல மாட்டிக்கொண்டு அழுத்தம் கொடுத்துப் புகைப்படங்களை சுட்டுத்தள்ளலாம். மிக நேர்த்தியாக சத்தமே இல்லாமல் படம் எடுத்ததால், அந்த நாளில் இந்த வகை கேமராக்களை வைத்து பல ரகசிய ஜல்சா படங்கள் எடுக்கப்பட்டனவாம்!

வில்லியம்ஸன் புரொப்பல்லர் கேமரா:

தரையை விட்டு மேலெழும்பி படம் பிடிக்கும் வித்தியாசமான கேமரா. முன்பக்கம் அட்டைப்பெட்டிபோல இருக்கும் பகுதியில் ஃபிலிம் ரோலும் அதன் அருகில் வித்தியாசமான புரொப்பல்லர் ஒன்றும் அதோடு இணைக்கப்பட்டிருக்கும். தரையை விட்டு மேலே எழ வைக்கும். தாறுமாறாகப் பறந்து கையை வெட்டிய சம்பவங்கள் எல்லாம் நடந்த பிறகு இந்த கேமரா தயாரிப்பு நிறுத்தப்பட்டது!

கேன் ஹேண்டில் கேமரா பென் அகிபா:

1903-ல் இங்கிலாந்து தொழிலதிபர் லேமென் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் கேன் ஹேண்டில் கேமரா. கையில் வைத்திருக்கும் கைத்தடியின் கைப்பிடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட உலகின் இரண்டாவது ‘ஹிடன் கேமரா’ இதுதானாம்.

ஹாக்டன் டிக்கா வாட்ச் கேமரா:

1906-ல் அமெரிக்க நிறுவனமொன்று கண்டுபிடித்த இந்த வகை கேமராவைக் கையில் வைத்திருக்கும் நபர் மணி பார்ப்பது போல பட்டனை அழுத்தி ரகசியமாகப் படங்களை இஷ்டம்போல சுட்டுத் தள்ளலாம். யாருக்கும் சந்தேகம் வராததால் அந்நாளில் இது செம ஹிட்!

டாக்டர் நியோர்ப்ரோன்னர்ஸ் புறா கேமரா:

முதலாம் உலகப்போரில் பெரும்பங்கு வகித்த இந்த வகை கேமராவை புறாவின் உடலில் கட்டிப் பறக்கவிட்டு எதிரிகளின் இருப்பிடத்தை துப்பறியப் பயன்படுத்தினார்கள் அமெரிக்கர்கள்.

செமைல!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick