வம்புக்காரங்க!

ஃபன்னி ஆப்பிரிக்கன் வீடியோஸ் என அடிக்கடி சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் உலாவும். சார்லி சாப்ளின் வகையான ‘ஸ்லாப்ஸ்டிக்’ காமெடியாகட்டும், நம் ஊர் சிவகார்த்திகேயன் வகை மிமிக்ரி கலந்த ‘ஸ்டேண்ட் அப்’ காமெடியாகட்டும் அதில் ஆப்பிரிக்கர்கள் கில்லி என நிரூபித்து இருக்கிறார்கள். அதில் சில முக்கியமான காமெடியன்கள் இங்கே...

ஹெலன் பால்: நைஜீரியா, கானா போன்ற நாடுகளில் அதிக இணையப் பயன்பாடும் சினிமாவும் இருக்கின்றன. நைஜீரியாவின் நம்பர் ஒன் காமெடியன் பாடகி மற்றும் நடிகை இவர். குழந்தை போல மிமிக்ரி செய்வதில் பலே லேடி. இவரது வீடியோக்கள் அங்கு செம ஹிட்ஸ் அள்ளுகின்றன.

கன்சிமி ஆனி: உகாண்டன் அழகி. ‘ஆப்பிரிக்காவின் குயின் ஆஃப் காமெடி’ என அழைக்கப்படுகிறார். ‘Don’t Mess With Kansiime’  என்ற வீடியோக்களால் அதிகம் அறியப்படுபவர் இவர். நம் ஊர் கோவை சரளாவை ஞாபகப்படுத்தும், கணவனை வெளுக்கும் வீடியோக்களில் அதிகம் நடித்திருக்கிறார் கன்சிமி. ‘என் கணவர்தான் என் பரிசோதனை எலி. முதலில் அவரிடம் நடித்துக் காட்டிய பிறகுதான் நான் கேமரா முன் போவேன்’ என்கிறார்.

ப்ரெண்டா க்ஸோலி: தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். அந்நாட்டின் இணையத்து இளவரசி. ‘ஜோக் டயனமைட்’ என அழைக்கப்படும் இவரது வேடிக்கையான வீடியோக்கள் ஹிட்ஸ் அள்ளுகின்றன. ப்ராங்க்ஸ் பண்ணுவதில் கில்லாடி லேடி. பாலியல் தொழிலாளியாக அவர் பிஸியான ரோடுகளில் ஆட்களை அழைத்துக் கலாய்ப்பதை அந்த நாட்டு ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

பேஸ்கட் மௌத்:  ஒரிஜினல் பெயர் ப்ரைட் ஒக்பொச்சா. (என்ன பெயர் இது?!) நைஜீரியாவில் இவருக்குப் பெண் ரசிகைகள் அதிகம். டபுள் மீனிங் காமெடியில், சில சமயங்களில் சிங்கிள் மீனிங்கிலும்கூட தெறிக்கவிட்டு காமெடியில் பட்டாசு கொளுத்துகிறார். எல்லோரையும் நெளிய வைத்து தெளிய வைப்பதில் வெண்ணிற ஆடை மூர்த்தியேதான். எல்லை மீறினாலும் என்டெர்டெயின்மென்ட்டுக்கு இவர் கியாரன்டி!

-சரண்ஜி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick