சறுக்குறாங்க...கலக்குறாங்க!

மெரிக்காவில் மோக்‌ஷி கேர்ள்ஸ்னு ஒரு ஸ்கேட்டிங் அமைப்பு இருக்கு. இது முழுக்க முழுக்க பெண்களைக்கொண்டு இயங்குவது. அப்படி என்ன வித்தியாசமா பண்றாங்க? அநியாயத்துக்கு கிளாமரா ட்ரெஸ் போட்டு ஸ்கேட்டிங் பண்றாங்க, கூடவே செக்ஸியா டான்ஸ் ஆடுறாங்க. இதை ஸ்கேட்டிங் கிரவுண்டோடு நிறுத்தியிருந்தா பரவாயில்லை. திடீர்னு தெருவிலும் இறங்கிடுறாங்க. தமிழ் சினிமா ஹீரோயின் மெளன்ட் ரோட்ல, மத்தியான வெயில்ல வந்து ஆடுவாங்களே அது மாதிரி. 

இந்தப் பெண்கள் எவ்வளவு அழகா இருக்காங்களோ அதே அளவுக்கு இவங்க அணிந்துகொள்ளும் ஸ்கேட்டிங் ஷூவும் அழகா இருக்கு. மோக்‌ஷி கேர்ள்ஸ் ஷூஸ்னு ஆன்லைனில் இதன் விற்பனை அமோகமா நடக்குது. இவர்களின் மோக்‌ஷி வீடியோ இன்னும் பிரபலம். ஓடும் ரயிலில் இருந்து அப்படியே பிளாட்ஃபார்மில் குதிப்பவர்கள் ரோட்டுக்குப் போய் அமெரிக்க டிரைவர்களை கவர்ச்சியால் அலறவிடுறாங்க. சிவனேன்னு சிங்கிளாப் போகும் ஓர் அமெரிக்கப் பையனின் பைக்கில் வரிசையாக நான்கு பெண்கள் பின்னாடி தொற்றி செயின் ஸ்கேட்டிங் பண்றாங்க. சிலருக்கு இதில் அடிபட்டு ரத்தம் வந்திருக்கு. இருந்தும்  நிறுத்தாம அப்படியே கன்டினியூ பண்ணியிருக்காங்க. இதில் அவ்வளவு வெறி இவர்களுக்கு.

இந்த டீம் மோக்‌ஷினு ஒரு வேனும் வெச்சுருக்காங்க. ஸ்கூல் வேன் மாதிரி விளையாட வரும் ஒவ்வொருத்தரையும் அதில் வீடு வீடாகப் போய் பிக்கப் பண்ணிக்கிறாங்க. இதுக்கு மோக்‌ஷி ஸ்கேட்டிங்னு பெயர் வெச்சதுக்குப் பதிலா செக்ஸி ஸ்கேட்டிங்னு வெச்சிருக்கலாம். அப்படி இருக்கு.

போட்டோஸ் எல்லாம் பார்த்தாச்சா... அப்புறம் என்ன, பக்கத்தைப் புரட்ட வேண்டியதுதானே!
 

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick