பாட்டுப் போடவா?

சென்னையின் இரவு வாழ்க்கையில் பார்ட்டிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இங்கிருக்கும் ஸ்டார் ஹோட்டல்களின் பப்களில் டி.ஜே எனப்படும் டிஸ்க் ஜாக்கிகளின் பங்கு அளப்பரியது. அதாவது இசையை வித்தியாசமான வேகத்தில் வித்தியாசமான இசைக்கோர்ப்பில் கொடுக்கும் கலைஞர்கள் இவர்கள். சென்னை ஸ்டார் ஹோட்டல்களில் கலக்கிவரும் அகில இந்தியப் பெண் டிஸ்க் ஜாக்கிகள் இவர்கள். ஒரு நிகழ்வுக்கு லட்சங்களைச் சம்பளமாக வாங்கும் செம காஸ்ட்லி செல்லங்கள்...

மா ஃபாய்ஜா: ‘எலெக்ட்ரானிக் டான்ஸ்’ வகையில் கில்லி. எல்.ஜி.பி.டி எனப்படும் ஒடுக்கப்பட்ட பாலினத்திற்காகக் குரல் கொடுப்பதிலும் அவர்களுக்கான இசை ஆர்வத்தை வளர்த்தெடுக்கவும் அதிகம் மெனக்கெடுபவர். பெரிய பார்ட்டி ஹால்களில் மிக மிகப் பொறுமையாக இசையின் வேகத்தைக் கூட்டி ஆட வைப்பது இவர் ஸ்டைல்!

கினி ராவ்: இந்த ஹைதராபாத் பெண்ணை சென்னை பப்களில் அடிக்கடி பார்க்கலாம். ஆஸ்திரேலியாவில் டி.ஜே-வாக பிராக்டீஸ் செய்து ஃபீல்டுக்கு வந்தவர். இன்றைய தேதியில் அதிக சம்பளம் கொடுத்து ஸ்பெஷல் இரவுகளில் இசையைத் தர நம் ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்து வருகிறார்கள் இவரை!

வந்தனா பல்லா: புனே பொண்ணுக்கு ஜாஸ், ராக், ஃபங்க் என அனைத்து வகை இசைகளும் அத்துப்படி. காரணம் பாடகராய் வாழ்க்கையை ஆரம்பித்தவர் டி.ஜே தொழில் மீது கொண்ட ஈர்ப்பால் துறை மாறி விட்டார். டான்ஸ் மியூஸிக்கில் புதுப்புது இசைக்கலவையைத் தருவது இவரது லட்சியம்!

பிரியாஞ்சனா: ஆடிக்கொண்டே பாடல்களைத் தவழவிடுவது இவரது பிரத்யேக ஸ்டைல். இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்டார் ஹோட்டல் பப்களிலும் இவர் டி.ஜே பண்ணி இருக்கிறார். இவரது டி.ஜே இருந்தால், ஆட்டமும் அதிரடியும் நிச்சயம் உண்டு. ஆனால், காது பத்திரம். சும்மா அதிரும்ல!

நேஹா: ஹைதரபாத்தின் நம்பர் ஒன் டி.ஜே. அடிக்கடி சென்னை விசிட் அடிப்பார். ‘நெப்ரா’ என்ற செல்லப்பெயரால் சென்னை யூத்களால் அழைக்கப்படுகிறார். டெக்னோ இசையில் கில்லி. புதுப்புது வார்த்தைப் பிரயோகங்களோடு பாடல்களை சிதற விடுவது இவரது ஸ்டைல்!

ஹர்ஷிதா கலீ: வித்தியாசமான ஒலிகளைக் கண்டுபிடித்துப் பாடல்களில் பயன்படுத்துவது இவரது ஸ்டைல். மிக முக்கியமாக ஆதிவாசி இசைக்கலப்பில் எக்ஸ்பர்ட். உலகின் முக்கிய டூரிஸ்ட் ஸ்பாட்களில் இவர் டி.ஜே பண்ணி இருக்கிறார். அமைதியான அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாத இசையைத் தவழ விடுவதால், வயதானவர்களின் ஏகபோக சாய்ஸ் இவர்!

ஆயிஷா ப்ராமணிக்: கோவா பெண்ணின் டி.ஜே இசையில் ஆடாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கூட்டம் கூட்டமாக ஆட வைப்பது இவரது ஸ்டைல். அப்படிப்பட்ட இசையை கச்சிதமாகத் தொகுத்து ப்ளே பண்ணி சிதற விடுவார். டான்ஸ் பிரியர்களின் சாய்ஸ்!

பூஜா: இந்தப் புனே பொண்ணு தற்போது வசிப்பது துபாய் என்றாலும் சென்னைக்கு அடிக்கடி பறந்து வருபவர். ‘கம் டான்ஸ் வித் மீ’ என்ற இவரின் ஷோவுக்கு எக்கச்சக்க ஃபேன்ஸ் பட்டாளம் உண்டு. வித்தியாசமான ஒலி, ஒளி அமைப்புகளோடு இவரது டி.ஜே தளம் சர்வதேசத் தரத்தில் இருக்க மெனக்கெடுவார்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick