இதுவும் புரட்சி, போராட்டம்தான்!

ங்கத்தில் நகை செய்வாங்க, சிலை செய்வாங்க, ஆனால் இவங்க என்னவெல்லாம் செஞ்சிருக்காங்கனு பாருங்க!

தங்க மாத்திரை: இதை அமெரிக்காவில் டோபியாஸ் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார். இந்த மாத்திரையை வாங்கி வீட்டில் வைத்தால், நினைத்த காரியம்  நடக்குமாம். தங்க இலைகளால் தயாரித்து இறுதியில் திரவத் தங்கத்தில் முக்கி பளபளவென செய்திருக்கிறார்கள். 24 கேரட் தூய்மையான தங்கம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நியூயார்க் அருங்காட்சியகத்தில் இதைக் காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். ஒரு மாத்திரையின் விலை 425 அமெரிக்க டாலர்கள். நம் ஊரில் கால்பால் மாத்திரை எப்படிப் பிரபலமோ அப்படி அமெரிக்காவில் இந்தத் தங்க மாத்திரை பிரபலம்!

தங்க முகப்பூச்சு: அதான் பாஸ் ஃபேஷியல். பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிக்கிற காலம் எல்லாம் மலையேறி ஃபேஷியல் பண்றதுதான் இப்போ ட்ரெண்டா இருக்கு. வழக்கமான கிரீம்களில் ஃபேஷியல் செய்து அலுத்துப்போனவர்களுக்காகவே ஸ்பெஷலாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த கோல்ட் ஃபேஷியல். சாதாரண கிரீமைப்போல முகத்தில் பூசிக்கொண்டு கண்ணை மூடி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து முகத்தைக் கழுவினால் தகதகன்னு முகம் மின்னுமாம். ஜப்பானின் பிரபல காஸ்மெட்டிக் நிறுவனம் இந்தத் தங்க கிரீமை தயாரித்திருக்கிறார்கள்!

தங்கச் சட்டை: இது மகாராஷ்டிராவில் தயாரான சட்டை. நான்கு கிலோ தங்கத்தில் காஸ்ட்லியாக இதைத் தயாரித்திருக்கிறார்கள். இதன் மதிப்பு 1.30 கோடி ரூபாய். கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இந்தச் சட்டைக்கு இடம் கிடைத்திருக்கிறது. பங்கஜ் பராஃக் என்ற ஜவுளிக்கடை அதிபர் தன்னுடைய பிறந்தநாள் விழாவுக்காக இந்தச் சட்டையை ஆர்டர் கொடுத்திருக்கிறார். இதை அணிந்துகொண்டு நடமாடும் நகைக்கடையாக வாழ்ந்து வருகிறார் அவர்!

தங்கக் கைபேசி: நமக்கு அம்மாவின் கைபேசிதான் தெரியும். இது முழுக்க முழுக்கத் தங்கத்தினால் செய்யப்பட்ட கைபேசி. 15 மில்லியன் டாலர் செலவில் இதைத் தயாரித்திருக்கிறார்கள். உலகின் விலை உயர்ந்த கைபேசிகளில் இதுவும் ஒன்று. விலை அதிகமான மொபைல் என்றாலே அதை ஆப்பிள் நிறுவனம்தான் தயாரிக்கும் என்ற விதிப்படி இதையும் ஆப்பிளே தயாரித்திருக்கிறது. 6,000, 7,000 அந்த ரேஞ்சுல மொபைல் எப்போ பாஸ் வரும்?

தங்கக் கழிவறை: இந்தக் கழிவறையின் பீங்கானில் இருந்து தண்ணீர் பிடிக்கிற வாளி, ஏன்... டிஷ்யூ பேப்பர் வரை எல்லாமே தங்கம்தான். உலகிலேயே 24 கேரட் சொக்கத்தங்கத்தில் கட்டிய முதல் கழிப்பறை இதுதானாம். ஹாங்காங் கலைஞர்கள் கைவண்ணத்தில் கலை நயத்தோடு இந்தக் கழிவறை உருவாகியிருக்கிறது.

ஒரு நொடி நம் கட்டணக் கழிப்பறையை நினைத்துப் பாருங்கள் மக்களே!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick