இங்கு அடகு வாங்கப்படும்!

மெரிக்காவின் ஹிஸ்டரி டி.வி-யின் புகழ்பெற்ற நிகழ்ச்சி ‘பான் ஸ்டார்ஸ்’. இதை அழகான தமிழில் டப் செய்து இருக்கிறார்கள். ஒரிஜினல்கூட இந்த அளவு சுவாரசியமாக இருக்குமா? என சந்தேகப்படும் அளவுக்கு அசத்தலான மேக்கிங். இது அடகுக் கடையைப் பற்றிய நிகழ்ச்சி, அரியவகைப் பொருட்களை அடகு வைக்கவும், வாங்கவும், விற்கவும் தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இங்கே வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு கடையில் மூன்று தலைமுறை ஆட்கள் ஒன்றாக வேலை செய்தால் எப்படி இருக்கும்? அங்கே நடக்கும் காமெடிகள்தான் இந்த பான் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி.

1989-ம் ஆண்டு ரிச்சர்ட் என்பவர் இந்தக் கடையைத் தொடங்கினார். தற்போது இவருடைய மகன் ரிக் ஹாரிசன், அவருடைய மகன் கோரி என மூன்று பேர் சேர்ந்து இந்தக் கடையை நடத்தி வருகிறார்கள். இதில் கடைசி ஆளான கோரிதான் இப்போது கடையின் முதலாளி. கோரியின் தாத்தா ரிச்சர்ட் ஒரு பழைய பஞ்சாங்கம். அவர் அட்வைஸ் பண்ணுவது கோரிக்கு சுத்தமாகப் பிடிக்காது. கோரி எப்போதும் புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுபவர். வேலைக்கே ஆகாத பொருட்களைக்கூட விலைக்கு வாங்கி அதில் லாபம் சம்பாதிப்பவர். அப்பா ஹாரிசனுக்கும் இவருக்கும் இதனால் அடிக்கடி சண்டை வரும். கோரியின் க்ளோஸ் ஃப்ரெண்ட் சும்லி, சரியான பால் பாயசம். கடையில் சொதப்பு சொதப்பென்று சொதப்புவார். டீமில் எல்லோருக்கும் இவர்தான் காமெடி பீஸ். இந்தக் கடையில் அரியவகைப் புகைப்படங்கள், துப்பாக்கிகள், பீரங்கிகள், அரியவகை நாணயங்கள், இசைக்கருவிகள் என எதுவாக இருந்தாலும் வாங்கலாம், விற்கலாம். இவர்களின் முக்கியமான வேலை அந்தப் பொருட்கள் ஒரிஜினல்தானா? இதை வாங்கினால் நமக்கு லாபம் கிடைக்குமா? என சோதனை செய்து வாங்குவது மட்டுமே. இந்த நிகழ்ச்சி லண்டனிலும், ஆஸ்திரேலியாவிலும் வேறு பெயர்களில் வேறு வேறு குழுக்களை வைத்து நடத்தப்படுகிறது. இருந்தும் இந்த அமெரிக்க டீமை அடிச்சிக்க இன்று வரை ஆள் இல்லை. உலகம் முழுக்க பான் ஸ்டார்ஸ் இப்போ பிரபலம்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick