சுட்ட படம்

ஞானப்பழம்

ந்தவார சுட்ட படம் பாலு மகேந்திராவின் க்ளாஸிக்கான `மூடுபனி'. இளையராஜா இசை, ஷோபா-பாலுமகேந்திரா ஜோடியின் கடைசிப் படம் என எக்கச்சக்க அம்சங்களைக் கொண்ட இந்தப்படம், ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் இயக்கத்தில் 1960-ல் வெளியான `சைக்கோ' படத்தின் தழுவல்.

முதலில் `சைக்கோ' படத்தின் கதை. அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில், தன் பாய் ஃப்ரெண்ட் சாமோடு வசித்து வருகிறாள் மேரியன் க்ரேன். சாமிற்கு எக்கச்சக்க கடன்கள் இருப்பதால் இவர்களின் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. ஒருநாள் மேரியனின் முதலாளி அவளிடம் 40,000 டாலர்களைக் கொடுத்து, அதை அலுவலகத்தின் வங்கிக்கணக்கில் போட்டுவிடுமாறு சொல்கிறார். அவ்வளவு பணத்தைப் பார்த்ததும் மேரியனின் மனம் தடுமாறுகிறது. இதை வைத்து சாமின் கடனை அடைத்துவிடலாம் என முடிவு செய்பவள், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டுக் கிளம்புகிறாள். அவள் செல்வதை அவளின் முதலாளி பார்த்துவிடுகிறார். பயணத்தின்போதே அசதி காரணமாக காரை ஓரங்கட்டிவிட்டு மேரியன் தூங்க, பேட்ரோலுக்கு வரும் போலீஸ் அதிகாரி அவளை எழுப்பி விசாரணை செய்கிறார். போலீஸைப் பார்த்ததும் மேரியன் பதற, அவருக்கு சந்தேகம் எழுகிறது. ஆனாலும் அவளை விட்டுவிடுகிறார். `தப்பித்தால் போதும்' என காரைக் கிளப்பிப் பறக்கும் அவள், வழியிலேயே தன் காரைக் கொடுத்துவிட்டு புது கார் வாங்குகிறாள். புதுக்காரில் பயணிக்கத் தொடங்கும் கொஞ்ச நேரத்திலேயே மணற்புயல் வீச, பயந்துபோய் வழியில் தெரியும் மோட்டலில் வண்டியை நிறுத்துகிறாள் மேரியன். மோட்டல் ஓனர் நார்மன் பேட்டன் இவளைத் தங்கவைத்து உபசரிக்கிறான். டின்னருக்கு அவன் வீட்டிற்குப் போகும் அவள், அங்கு ஏராளமான விலங்குகள் பாடம் செய்து வைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறாள். தான், தன் மனநிலை சரியில்லாத அம்மாவோடு வசித்து வருவதாகக் கூறுகிறான் நார்மன். டின்னர் முடிந்து மேரியன் ஷவரில் குளிக்கும்போது திடீரென முன்னால் குதிக்கும் ஒரு பெண் உருவம், அவளை குத்திக் கொல்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick