மதுரை வீரர்கள்!

‘மதுரைனு சொன்னாலே பத்துப் பதினைஞ்சு பேர் அருவாளோடு சுத்திட்டு இருப்பாய்ங்க, காஸ்ட்லி மொபைல் வெச்சிருந்தாலும் மொச்சைக்கொட்டை பல்லழகி பாட்டைத்தான் ரிங்டோனாக வெச்சுருப்பாய்ங்க’ என தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருக்கும் இமேஜில் கல்லைத் தூக்கி எறிந்திருக்கிறார்கள் மதுரை சோல்ஜர்ஸ் சொல்லிசைக் குழுவினர் (ராப் பேண்ட்). மதுரையில் சின்னக்குழுவாக இணைந்து ராப் பாடிய `மதுரை சோல்ஜர்ஸ்' இப்போது யுவன் இசையில் ராப் பாடியிருக்கிறார்கள். ராப் குழுவில் ஒருவரான ஸ்யானுடன்  பேசியதில்...

‘`நானும் மியூஸிக் புரொடியூஸர் நௌஷாஜியும் சொந்தக்காரப் பயபுள்ளைங்க. சின்ன வயசில் இருந்தே ஒண்ணாதான் சுத்துவோம். 2006-ம் வருசம் நௌஷாஜி மதுரை, கோரிப்பாளையத்தில் கேம் சென்டர் ஆரம்பிச்சார். அங்கேதான் நான் கேம் விளையாடிட்டுப் பேசி சிரிச்சுக்கிட்டு இருப்பேன். அந்த கேம் சென்டருக்கு விளையாட வந்து எங்ககூட பழக்கம் ஆனவர்தான் செந்துலன். அந்தச் சமயத்தில் யோகி-பி சாரோட ‘வல்லவன்’ ஆல்பம் செம ஹிட். அந்த ஆல்பத்தில் இருக்கும் ‘மடை திறந்து...’ பாடலைக் கேட்டு இம்ப்ரெஸ் ஆகி, வரியே புரியலைனாலும் வாய்க்கு வந்ததை மூணு பேரும் தம் கட்டிப் பாடிட்டு இருப்போம். அப்படியே பாடிப்பாடி ராப் இசை மேல் ஈர்ப்பு வந்திடுச்சு. சில இங்கிலீஷ் ராப் பாடல்களின் வரிகளையும் தெரிஞ்சுக்கிட்டு ஓரளவு முறையா பாட ஆரம்பிச்சோம். ஒருநாள் ஃபுட்பால் விளையாடி முடிச்சிட்டு சும்மா உட்கார்ந்து இங்கிலீஷ் ராப் பாடல் ஒண்ணு பாடிட்டு இருந்தோம். அப்போ எங்கிருந்தோ எசப்பாட்டு கேட்க, யார்னு தேடிப் பார்த்தால் என் பொடனிக்குப் பின்னால் உட்கார்ந்து பாடிட்டு இருந்தார் ராபின். இப்படியாக இசைதான் எங்க எல்லோரையும் ஒண்ணு சேர்த்துச்சு’’ என்றவர் சின்ன கேப் விட்டு,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick