விடாது கடுப்பு! | Funny Jokes - Timepass | டைம்பாஸ்

விடாது கடுப்பு!

நாம விலகி விலகிப் போனாலும் `எலே... தப்பிக்கவா பாக்க' என விடாமல் விரட்டும் வில்லத்தனங்கள் எல்லா திசைகளிலும் நமக்கு எண்ட் கார்டு போடும். அப்படி அணை கட்டும் சில சமாசாரங்களைப் பார்க்கலாமா?

* ஆபீஸ்ல எப்பவும் முறைத்தபடியே இருக்கும் மேனேஜர் முகத்தைப் பார்த்தாலே மண்டை கனத்துப்போய் `ஒரு டீ சாப்பிடலாம்' என கேன்டீன் போனால், கொஞ்ச நேரத்தில் நமக்குப் பக்கத்து டேபிளிலேயே வந்து அவரும் குத்தவைப்பார். #நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா மகாபிரபு?

* படம் பார்க்கும்போது காமெடி எனும் பெயரில் எரிச்சலூட்டும் மொக்கைப் பேர்வழிகள் எப்போதான் ஸ்க்ரீனை விட்டு நகருவாய்ங்களோனு காத்திருக்கும் தருணங்களிலும் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையேயான ரொமான்ஸ் சீனில்கூட கூடவே நின்னு டீ குடிச்சுட்டு இருப்பாய்ங்க. #இரிடேட்டிங் இடியட்ஸ்!

* காலேஜில் கணக்குப் பரீட்சைக்காக விழுந்து விழுந்து படிச்சுக் கடுப்பாகிப் போய் கொஞ்ச நேரம் இளைப்பாறலாம் என ஃபேஸ்புக் பக்கம் தலையைக் காட்டினால், டைம்லைனில் முதல் போஸ்ட்டே `If u Genious... solve it'னு மூளையை இளக வைக்கும் மனக்கணக்கை ஷேர் பண்ணியிருப்பாய்ங்க. அப்படியே தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கன்னு கேப்டன் மாதிரி கத்தத் தோணும். #நம்ம போனாச்சே அது.

* கஷ்டப்பட்டு ஒரு பொண்ணை பள்ளிக்கூடம் படிக்கும்போதிலிருந்து ஃபாலோ பண்ணி, ஒரு வழியா காலேஜ் போகும்போது கரெக்ட் பண்ணினாலும், அவிங்க வீட்டுல ஈஸியா ஒரு ஃபாரீன் ரிட்டர்ன் மாப்பிள்ளையைப் பார்த்துப் பொண்ணையும் கன்வின்ஸ் பண்ணிக் கல்யாணமும் செஞ்சு வெச்சுடுவாய்ங்க. எவ்வளவு நாசூக்கா நீங்க ப்ளான் போட்டாலும், எங்கிட்டாச்சும் புகுந்து கூலா பிரிச்சு வெச்சுடுறீங்களே... எப்படிப்பா இப்படி?

* எத்தனை ஃபேக் ஐ.டி.களை க்ரியேட் பண்ணி எஸ்கேப் ஆகலாம்னு நினைச்சாலும் அதே `ப்ரேமம்' நிவின் பாலி போட்டோ வெச்ச ஒருத்தன் வந்து ரெக்வெஸ்ட் கொடுத்துட்டு `ப்ளீஸ்... லைக் மை ப்ரொஃபைல் பிக்சர் டோலி'ன்னு மெசேஜ் பண்ணுவான். ஒருவேளை நம்ம ஐ.டி. ஆரம்பிச்சதுமே இவிய்ங்களுக்கு எல்லாம் நோட்டிஃபிகேஷன் போகுமோ?

* மாதக் கடைசியில் கொஞ்சூண்டு பெட்ரோலுக்குக் கஞ்சத்தனப்பட்டு குறுக்குவழின்னு சந்து பொந்துகளுக்கு உள்ளேயெல்லாம் வண்டியை விட்டு மெயின் ரோட்டைக் கடக்கும்போது, ஒரு போலீஸ் பேட்ரல் நிற்கும். கொடுமை கொடுமைனு கோயிலுப் போனா அங்கே ஒரு ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடின கதையா ஒன்வேல வந்ததுக்கு ஃபைனைக் கட்டிட்டுக் கடுப்போட ஆக்ஸிலேட்டரைத் திருப்புவோம். #கட்டம் கட்டிட்டா யாராலேயும் காப்பாத்த முடியாது மொமென்ட்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick