எல்லாமே மொமென்ட்டுதான்!

ம் வாழ்க்கையில் எதிர்பாராத, ‘அப்டியே ஷாக்காகிட்டேன்’ ரக மொமென்ட் நம்மாலேயோ அல்லது பிறராலேயோ சில சமயம் நமக்கு ஏற்படும். அந்த நேரத்துக்குத் தகுந்தமாதிரி சினிமா பன்ச்களை அந்த மொமன்ட்களுக்குப் பொருத்திப் பார்த்தேன்!

மக்குக் கடன் கொடுத்தவன் போனில் நம்பர்லாம் தேயத் தேய நமக்குப் போட்டு பார்த்துட்டு மெர்சலாகி, வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுனு நேரா வீட்டுக்கு வருவான். ‘நான் வீட்டுக்குள்ள இல்லைனு சொல்லு பாப்பா’ன்னு நம் குழந்தையை விட்டுச் சொல்லச் சொல்லிட்டு, வீட்டுல இல்லாதது மாதிரியே நடிச்ச பெருமித மொமென்ட்டோடு கொஞ்ச நேரத்துல வெளியே வந்தா, அவனும் போறமாதிரி நடிச்சுட்டு ‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ன்னு நம்ம பாப்பாகிட்ட பார்வை மொமென்ட்டாலேயே சொல்வான். நமக்கு ‘நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாப் போச்சே?’ மொமெண்ட்தான்!

பட்டப்பகல் கத்தரி வெயிலில், தார் ரோட்டுல நடப்போம். கபால்னு கால் செருப்புல ஒண்ணு அத்துக்கிடும். அப்போ, ‘என்ன கொடுமை சார் இது’ங்கிற மொமென்ட் முகத்துல உதிக்கும். கொஞ்ச நேரத்துலேயே வானம் கறுத்து, வெயில் சிறுத்து, மழை தூறும் பாருங்க, உடனே ‘கடவுள் இருக்கான் குமாரு’ மொமென்ட்தான். மழை நல்லது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick