ஆத்தீ... பயந்து வருது!

காதலி, நாம அனுப்பின வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்தும் ரிப்ளை பண்ணாதபோது ஏற்படும் பதற்றத்தை, ‘மைசூர்பாகு செய்யப் போறேங்க’ என மனைவி போன் போட்டுச்சொல்லும்போது ஏற்படும் பதற்றத்தை, ‘ஒரு பந்துல இந்தியா ஆறு ரன் அடிக்கணுமே’ என்ற கிரிக்கெட் ரசிகர்களின் பதற்றத்தை மிஞ்சக்கூடியது மனைவியுடன் தீபாவளிக்குத் துணி எடுக்கவந்து ஜவுளிக்கடை வெயிட்டிங் ரூமில் காத்துக்கிடக்கும் கணவர்களின் பதற்றம்!

‘இன்னைக்கி எத்தனை ஆயிரத்தைப் பழுக்க வைக்கப் போறாளோ’னு பயத்துல ஊரில் இருக்கிற குலதெய்வங்களையெல்லாம் வேண்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கும்போதுதான், ‘ஏன் சார்.. வருசத்துக்கு ஒரு தடவைதானே தீபாவளி வருது. வேணும்கிறதை எடுத்துக் கொடுங்க'னு ஒரு வெயிட்டிங் ரூம்மேட் வாலன்டியரா வந்து வண்டியில ஏறுவாப்ல.

‘`ஏன்யா யோவ்... வருசத்துக்கு எத்தனை ஒரே ஒரு தடவையா வேணும்கிறதை எடுத்துக் கொடுக்கிறது? ஜனவரி மாசம் பொங்கல் பர்ச்சேஸிங்னு வேணும்கிறதை எடுத்துக் கொடுக்கிறோம், பிப்ரவரி மாசம் காதலர் தினம்னு ஹார்ட்டினைத் தெறிக்கவிட்டு துணி எடுத்துக் கொடுக்கிறோம். மே மாசம் சம்மர் கலெக்‌ஷன்னு விளம்பரம் போட்டதுக்கே பர்ஸுல பாதி போச்சு. ஜூன் மாசம் குழந்தைக்கு யூனிஃபார்ம் எடுக்கிற சாக்குல ரெண்டு சுடிதார், 3 புடவை எடுத்துக்கிறாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick